லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்த வாரிசு பட நடிகர்.. வேற லெவலில் டிரெண்டாகும் புகைப்படங்கள்!
சென்னை: லியோ படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய்யை வாரிசு படத்தில் நடித்த நடிகர் ஷாம் சந்தித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
குஷி படத்தில் ஷாம் ஒரு சின்ன ரோலில் விஜய்யின் நண்பராக நடித்திருப்பார். அப்போதிருந்தே விஜய்யுடன் நெருங்கிய நட்புக் கொண்ட நடிகர்களில் ஷாமும் ஒருவர்.

இந்த ஆண்டு வம்சி இயக்கத்தில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணனாக வில்லனாக நடித்திருப்பார்.
பிரபலங்களே ரசிகர்கள் தான்: ரஜினிகாந்த், அஜித் மற்றும் நடிகர் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு பல இளம் நடிகர்களும் நடிகைகளும் ரசிகர்களாக உள்ளனர். அவர்களின் படங்கள் வெளியாகும் போது ரசிகர்களை போலவே முதல் நாள் முதல் ஷோ தியேட்டருக்கு சென்று பார்த்து வருகின்றனர். மேலும், தொடர்ந்து டச்சில் இருந்து வரும் நடிகர்களை மனதில் வைத்துக் கொண்டு முன்னணி ஹீரோக்களும் தங்கள் படத்தில் அவர்களுக்கான ரோல் அமையும் போது அழைத்து வாய்ப்பு கொடுத்து வருகின்றனர்.

வாரிசு பட நடிகர்: நடிகர் ஷாம் பல ஆண்டுகளாக விஜய்யின் ரசிகராகவும் நண்பராகவும் இருந்து வரும் நிலையில், இந்த ஆண்டு வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ் நடித்த வாரிசு படத்தில் விஜய்யின் இரண்டாவது அண்ணனாக நடித்திருப்பார். மேலும், படத்தின் வில்லனாகவும் அவர் நடித்து அசத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில்: பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் சிவகார்த்திகேயன் விஜய்யை சந்தித்த போட்டோக்கள் எல்லாம் வெளியாகி டிரெண்டான நிலையில், தற்போது லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் ஷாம் விஜய் மற்றும் த்ரிஷாவை சந்தித்த போட்டோக்கள் தீயாக பரவி வருகின்றன.

த்ரிஷாவுடன் ஷாம்: லேசா லேசா படத்தில் த்ரிஷாவுடன் இணைந்து நடித்த நடிகர் ஷாம் விஜய் மற்றும் த்ரிஷாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களை பார்த்த நிலையில், லேசா லேசா 2வே எடுக்கலாம் போல இருவரும் அப்படி இருக்காங்களே என கமெண்ட் போட்டு வருகின்றனர். வாரிசு படத்தைத் தொடர்ந்து நடிகர் ஷாம் அடுத்து எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்களை அதிகளவில் தொற்றிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











