’வாரிசு’ விஜய்யுடன் செல்ஃபி எடுத்த ராஷ்மிகா மந்தனா.. டிரெண்டிங்கில் சும்மா தெறிக்குது!
சென்னை: நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் வரிசையாக வெளிவந்த நிலையில், தற்போது அதற்கு போட்டியாக நடிகர் விஜய்யின் புகைப்படங்களும் வெளியாக தொடங்கி உள்ளன.
வாரிசு படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய், அந்த படத்தின் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா உடன் எடுத்துக் கொண்ட க்யூட்டான செல்ஃபி புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவை ஆட்சி செய்து வருகிறது.
#ThalapathyVijay ஹாஷ்டேக்கை பதிவிட்டு ஏகப்பட்ட ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அந்த போட்டோவை ரீட்வீட் செய்து வருகின்றனர்.

தல தளபதி ரசிகர்கள் குஷி தல தளபதி ரசிகர்கள் குஷி
நடிகர் அஜித்தின் போட்டோக்கள் மட்டும் வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்த நிலையில், நடிகர் விஜய்யின் புகைப்படங்களும் வெளியாகி விஜய் ரசிகர்களையும் குஷியில் ஆழ்த்தி உள்ளது. வரும் பொங்கலுக்கு தல தளபதி ரசிகர்கள் இருவருக்குமே திரையில் மிகப்பெரிய ட்ரீட் கிடைக்குமா? என இரண்டு தரப்பும் மிகவும் ஆவலாக காத்திருக்கிறது.

ஸ்டார்ட் பண்ண ஷாந்தனு
நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படப்பிடிப்பின் போது டெல்லியில் எடுத்துக் கொண்ட அன்சீன் புகைப்படத்தை ஷேர் செய்து நேற்றே விஜய் ரசிகர்களை கொண்டாட்ட மோடுக்கு கொண்டு வந்தார் நடிகர் ஷாந்தனு. அவர் ஷேர் செய்த மாஸ்டர் மெமரீஸ் போட்டோ டிரெண்டான நிலையில், தற்போது வாரிசு படத்தில் இருந்து சூப்பரான புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

ராஷ்மிகாவுடன் செல்ஃபி
நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் நடிகர் விஜய் எடுத்துக் கொண்ட க்யூட்டான செல்ஃபி புகைப்படம் தான் தற்போது ட்விட்டர் டிரெண்டிங்கை தெறிக்கவிட்டு வருகிறது. வாரிசு படத்தில் உள்ள காட்சியாகத்தான் இது இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். நடிகர் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் செம க்யூட்டாக உள்ளனர்.

விஜய் ஹேர்ஸ்டைல்
ஒரு கண் அருகே முடி வந்து விழுவதை போல நடிகர் விஜய் செம கூலாக கொடுத்த போஸை பார்த்து விஜய் ரசிகர்கள் அவரது போட்டோவை மட்டும் கிராப் செய்து தனியாக டிரெண்ட் செய்து வருகின்றனர். ஏஜ் இஸ் ரிவர்ஸ் கியர் என்றும், தலைவா என்றும் தளபதி என்றும் ரசிகர்கள் கேப்ஷன் போட்டு புகைப்படங்களை தீயாக ஷேர் செய்து வருகின்றனர்.

150 கோடி பிசினஸ்
வாரிசு படத்தின் டிஜிட்டல் உரிமம் மற்றும் சாட்டிலைட் உரிமம் மட்டுமே 150 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், ப்ரீ ரிலீஸ் பிசினஸ் 250 கோட் வரை இப்பவே நடந்து முடிந்து விட்டது என்றும், பீஸ்ட் படத்தில் நடந்ததை போல எந்தவொரு சொதப்பலும், இல்லாமல் வாரிசு வெளியாகி 300 கோடி பாக்ஸ் ஆபிஸை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











