ராஷ்மிகாவை எல்லாருக்கும் பிடிக்கும்.. அவருக்கு எந்த ஹீரோவை பிடிக்கும் தெரியுமா!

ஐதராபாத் : நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து இந்திய அளவில் பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார்.

அவரது நடிப்பில் புஷ்பா, சீதா ராமம் என அடுத்த ஹிட் படங்கள் வெளியாகி சூப்பர் வெற்றியை பெற்றுள்ள நிலையில் அம்மணி தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்தியுள்ளார்.

தற்போது விஜய்யுடன் தமிழில் வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்தப் படம் இவரது மனதுக்கு நெருக்கமாக மாறியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா

நடிகை ராஷ்மிகா மந்தனா

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமில்லாமல் இந்தியிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம், மிஸ்டர் காம்ரேட் மற்றும் தமிழில் கார்த்தியுடன் இணைந்து நடித்த சுல்தான் ஆகிய படங்கள் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தன.

புஷ்பா படம்

புஷ்பா படம்

தொடர்ந்து அல்லு அர்ஜுனுடன் கிராமத்து கெட்டப்பில் நடித்தார் ராஷ்மிகா. ஸ்ரீவள்ளி என்ன கேரக்டரில் இந்தப் படத்தில் இவர் நடித்திருந்த நிலையில், இந்தப் படமும் இவரை சிறப்பாக கைத்தூக்கி விட்டுள்ளது. தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு வெளியான சீதா ராமம் படத்தில் பாகிஸ்தானிய பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

சீதா ராமம் படம்

சீதா ராமம் படம்

இந்தப் படமும் சில தினங்களிலேயே பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாக மாறியுள்ளது. தனது அடுத்தடுத்த படங்கள் ஹிட்டடித்து வருவதால் மிகவும் உற்சாகமாக மாறியுள்ளார். தன்னுடைய 2 கோடி ரூபாய் சம்பளத்தை தற்போது இவர் 4 கோடி ரூபாயாக மாற்றியுள்ளாராம். இதனால் இவரை புக் செய்யும் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய்யுடன் ஜோடி

விஜய்யுடன் ஜோடி

கோலிவுட்டில் சுல்தான் படம் மூலம் சிறப்பான என்ட்ரி கொடுத்த ராஷ்மிகா, அடுத்த படத்திலேயே விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார். விஜய்யின் இந்தப் படம் குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து உருவாகிவரும் நிலையில், இந்தப் படத்தில் ராஷ்மிகாவிற்கு சிறப்பான கேரக்டர் அமைந்துள்ளதாம்.

மனதுக்கு நெருக்கமான வாரிசு

மனதுக்கு நெருக்கமான வாரிசு

இந்தப் படம் தனது மனதுக்கு நெருக்கமான படமாக மாறியுள்ளதாக சமீபத்திய பேட்டியில் ராஷ்மிகா தெரிவித்திருந்தார். பான் இந்தியா ஸ்டாரான விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளதால் ராஷ்மிகாவின் பேன் பேஸ் அதிகரித்துள்ளது. இதனால் மிகவும் உற்சாகமாக காணப்படுகிறார். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

விஜய்தான் என்னுடைய க்ரஷ்

விஜய்தான் என்னுடைய க்ரஷ்

இந்நிலையில் தன்னுடைய க்ரஷ் விஜய் தான் என்று ராஷ்மிகா தெரிவித்துள்ளார். சிறு வயதிலிருந்தே விஜய்யை தனக்கு பிடிக்கும் என்றும் பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். தனக்கு பிடித்தமான நடிகருடன் தான் இணைந்து நடித்துவருவது தன்னுடைய கனவு நனவான தருணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானிய பெண்ணாக ராஷ்மிகா

பாகிஸ்தானிய பெண்ணாக ராஷ்மிகா

தற்போது ராஷ்மிகாவின் நடிப்பில் வெளியாகியுள்ள சீதா ராமம் படத்தில் அவரது நடிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தன்னுடைய தாத்தாவின் விருப்பப்படி ஒரு கடிதத்தை எடுத்துக் கொண்டு அதை உரியவரிடம் சேர்க்கும் பொருட்டு பாகிஸ்தானில் இருந்து வரும் பெண்ணாக இந்தப் படத்தில் அவர் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X