விஜய்யோட அம்மா செய்து கொடுத்த சாம்பார்.. ராஷ்மிகாவிற்கு பிடித்த தமிழ்நாட்டு டிஷ் அது தானாம்!
சென்னை : வாரிசு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
இந்தப் படத்தில் இவருக்கு அதிகமான காட்சிகள் இல்லை என்றபோதிலும் நடனக்காட்சிகளில் தன்னுடைய அசைவுகளால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்திய அளவில் தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் இந்தியிலும் இவர் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா மந்தனா பான் இந்தியா ஸ்டாராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் இந்தியிலும் முக்கியமான படங்களில் நடித்து வருகிறார். அல்லு அர்ஜுனுடன் இவர் நடித்து வெளியான புஷ்பா படத்தின் சர்வதேச வெற்றியை தொடர்ந்து இவருக்கு பான் இந்தியா ஸ்டார் அந்தஸ்து கிடைத்துள்ளது.

ராஷ்மிகா நடிப்பில் ரிலீசான வாரிசு படம்
தற்போது இவரது நடிப்பில் வாரிசு படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய்யுடன் இவர் நடித்துள்ளார். முன்னதாக நடிகர் கார்த்தியுடன் சுல்தான் படத்திலும் இவர் கிராமத்து கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படம் தமிழில் இவரது அறிமுகப்படமாக அமைந்தது. முன்னதாக கன்னடத்தில் ரிஷப் ஷெட்டியுடன் இவர் நடித்த கிரிக் பார்ட்டி படம் இவருக்கு நல்ல அறிமுகத்தையும் சிறந்த நடிகைக்கான சைமா விருதையும் பெற்றுத் தந்தது.

இந்திய அளவில் பிசியான ராஷ்மிகா
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்துவரும் ராஷ்மிகா நடிப்பில் நேற்றைய தினம் வாரிசு படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் நடிக்க இவருக்கு அதிகமான ஸ்கோப் இல்லையென்ற போதிலும், நடனக் காட்சிகளில் தன்னுடைய சிறப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

விஜய்யுடன் ஜோடி சேர்ந்ததில் மகிழ்ச்சி
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தை சேர்ந்தவர் என்ற போதிலும் தமிழ் மீதும் நடிகர் விஜய் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக உள்ளார் ராஷ்மிகா. சிறுவயதில் விஜய் படங்களை தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து சென்று பார்ப்பேன் என்று வாரிசு படத்தின் ப்ரமோஷனின்போது தெரிவித்திருந்தார். மேலும் தான் மிகவும் விரும்பி ரசித்த விஜய்யுடன் இணைந்து நடித்தது தன்னுடைய கனவு நனவான தருணம் என்றும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

பேவரைட்டான தமிழ்நாட்டு டிஷ்
இதனிடையே தன்னுடைய சமீபத்திய பேட்டியொன்றில் தன்னுடைய மிகவும் பேவரைட்டான டிஷ் என்றால் அது தமிழ்நாட்டு சாம்பார் தான் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே விஜய்யின் அம்மா ஷோபா ராஷ்மிகாவிற்காக சாம்பார் செய்து கொடுத்து அதை ராஷ்மிகா மிகவும் ரசித்து ருசித்து சாப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











