Vijay: வாரிசு, லியோவில் அப்பாவோட சண்டை.. கோட் படத்துல மகனோட.. அப்போ தளபதி 69 கதை இதுதானா?
சென்னை: தளபதி விஜய்க்கு படம் பண்ண கதையை ரொம்ப எல்லாம் யோசிக்க வேண்டாம் என்றும் அவருடைய குடும்ப பிரச்சனையை கதையாக எடுத்தாலே படம் பல நூறு கோடி வசூல் ஈட்டும் என நெட்டிசன்கள் பயங்கரமாக சோஷியல் மீடியாவில் கலாய்த்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முதல் நாளே 100 கோடி கலெக்ஷன் சாதனை கொடுக்கக் கூடிய நடிகராக விஜய் உள்ளார். ஆனால், இன்னும் ஒரு படம் மட்டும் தான் அவர் நடிப்பில் வரும் என்பது தான் கோட் படத்தின் கொண்டாட்டங்களை தாண்டிய வேதனையாக ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்றெல்லாம் விஜய் படத்துக்கு டாப் லெவலில் பெயரை யோசித்து விட்டு படத்திற்கான கதையை சரியாக எழுதவில்லையே வெங்கட் பிரபு என்கிற கேள்வியைத் தான் பலரும் எழுப்பி வருகின்றனர்.
மாநாடு கதையே காப்பி: ஹாலிவுட்டில் வெளியான நேக்கட் மற்றும் Two Distant Strangers படங்களில் இருந்து காப்பி அடித்து தான் வெங்கட் பிரபு மாநாடு படத்தையே உருவாக்கினார் என்கிற குற்றச்சாட்டை ரசிகர்கள் வைத்தனர். கோட் படத்தையும் ஆரம்பத்தில் இருந்தே ஜெமினி மேன் படத்துடன் ஒப்பிட்டு வந்த ரசிகர்கள் படத்தை பார்த்த பின்னரும் ஜெமினி மேன், விஜயகாந்த் நடித்த ராஜதுரை படங்களின் கதை தான் இந்த படம் என கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

வாரிசு, லியோ கதை: விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை மையமாக வைத்தே வாரிசு மற்றும் லியோ படங்களில் அப்பாவுக்கும், மகனுக்கும் இடையே பிரச்சனை இருப்பது போல படத்தின் கதைகள் உருவாக்கப்பட்டதாக நெட்டிசன்கள் ஏகப்பட்ட ட்ரோல்கள் செய்து வருகின்றனர்.
கோட் படத்தில் மகனுடன் சண்டை: தளபதி விஜய்யின் சிபாரிசு இல்லாமல் சினிமாவில் லைகா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் படம் பண்ண முன் வந்த நிலையில், விஜய்க்கும் அவரது மகனுக்கும் இடையே பிரச்சனை என ஏகப்பட்ட வதந்திகள் கிளம்பின. இந்நிலையில், வெங்கட் பிரபு அந்த பிரச்சனையை வைத்தே கோட் படத்தை இயக்கி விட்டார் என்று தற்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். கோட் படத்தில் அப்பா விஜய்க்கும் மகன் விஜய்க்கும் நடக்கும் சண்டை தான் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

மகன் பெயரையே வைத்து: சிவகார்த்திகேயனிடம் கோலிவுட்டை ஒப்படைத்து விட்டு அரசியலுக்கு விஜய் செல்வது போல கிளைமேக்ஸில் சூசகமாக காட்சி அமைக்கத் தெரிந்த வெங்கட் பிரபுவுக்கு நேரடியாக மகன் விஜய்க்கு சஞ்சய் என்கிற பெயரையே படத்தில் வைத்து கோட் கதையை உருவாக்கி விஜய்க்கு சொல்ல அவரும் ஓகே சொல்லி நடித்திருக்கிறார் என கலாய்த்து வருகின்றனர்.
தளபதி 69 என்ன கதையா இருக்கும்?: கோட் படத்தில் கணவரை சந்தேகப்படும் மனைவியாக சினேகாவை காட்டியிருப்பது கூட குறியீடு தான் என்கின்றனர். தளபதி 69 படத்தில் கணவனுக்கும் மனைவிக்குமான சண்டையாக படத்தை எச். வினோத் எடுக்கப் போறாரு பாருங்க என இப்போதே தளபதி 69 படத்திற்கான கதையையும் சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் ஷேர் செய்து பங்கமாக கலாய்த்து வருகின்றனர். விஜய் படத்தை பொறுத்தவரையில் கதையா முக்கியம் தளபதி தரிசனத்தை பாருடான்னு ரசிகர்கள் படத்தை பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்க வைத்து விடுகின்றனர்.


Click it and Unblock the Notifications











