அய்யோ அம்மா ஆடியோ லாஞ்ச்..இணையத்தில் டிராண்டாகும் மீம்ஸ்..வெச்சு செய்யும் அஜித் ரசிகர்கள்!

சென்னை : வாரிசு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில், விஜய் ரசிகர்கள் தடியடி வாங்கியதை அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.

சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் வாரிசு. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கி உள்ளார்.

இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 12ம் தேதி திரையரங்கில் வெளியாகி உள்ளது.

வாரிசு

வாரிசு

அஜித்தின் துணிவும், விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்த தகவல் வெளியானதில் இருந்தே, துணிவா... வாரிசா என ட்விட்டரில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஒருவரை டார்கெட் செய்து ட்விட்டரை டிரண்டாக்கி வந்தனர். இதையடுத்து வாரிசு படம் வெளியாவதிலும் ஒரு பிரச்சனை ஏற்பட்டு பின் சரி செய்யப்பட்டது.

வாரிசு இசை வெளியீட்டு விழா

வாரிசு இசை வெளியீட்டு விழா

இதையடுத்து அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொடங்கி உள்ளது. இந்த விழாவிற்காக நேரு ஸ்டேடியம் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த விழாவிற்கு நடிகர் செம கூலாக மாஸ் எண்ட்ரி கொடுத்திருந்தார். அவர் அரங்கிற்கு வந்தும் ரசிகர்கள் கைத்தட்டியும் விசில் அடித்தும் அரங்கை தெறிக்க விட்டனர்.

தீ தளபதி தெறிக்கவிட்ட ரசிகர்கள்

தீ தளபதி தெறிக்கவிட்ட ரசிகர்கள்

இசைவெளியீட்டு விழா தொடங்குவதற்கு முன்பாக விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் நேரு விளையாட்டு அரங்க வாசலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு தீ தளபதி என்ற கோஷத்தை எழுப்பியும், விஜய்யின் போஸ்டருக்கு ஆரத்தி எடுத்து விஜய்யை வரவேற்க தயாராக இருந்தனர்.

ரணகளமான நேரு ஸ்டேடியம்

ரணகளமான நேரு ஸ்டேடியம்

இதையடுத்து, நேரு ஸ்டேடியத்திற்குள் டிக்கெட் இல்லாமல் உள்ளே நுழைய முயன்ற ரசிகர்களும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதில் சில காவலர்கள் காயம் அடைந்ததால், போலீசார் அவர்களை தடியடி நடத்தி விரத்தி அடித்தனர். இதனால் அந்த பகுதியே சிறிது நேரம் ரணகளமானது.

அய்யோ அம்மா ஆடியோ லாஞ்ச்

அய்யோ அம்மா ஆடியோ லாஞ்ச்

வாரிசு இசை வெளியீட்டு விழா ஹாஷ்டேக்குகள் காலை முதலே டிரெண்ட் ஆகி வந்த நிலையில், போலீஸ் மீது ரசிகர்கள் இப்படி நடந்துகொண்டு தவறு என்று கூறி கண்டித்து பலரும் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள். தற்போது அஜித் ரசிகர்கள் #அய்யோஅம்மாஆடியோலாஞ்ச் எனும் நெகட்டிவ் ஹாஷ்டேக்கை போட்டு விஜய் ரசிகர்கள் தடியடி வாங்குவதை ட்ரோல் செய்து மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்

வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்

எதுக்கு ரசிகர்களை கூப்பிட்டு போன வாரம் பிரியாணி போட்டீங்க, ஆடியோ லாஞ்ச்ல அடி வாங்க தானா என்றும், கொஞ்ச நேரம் அடி வாங்கட்டும் சார்.. அப்ப தான் என்னால ஸ்டேஜ்ல ஏறி என் போட்டோவ உடைங்க, என் பேனரை கிழிங்க, ஆனா என் ரசிகர் மேல கை வைக்காதிங்க என்று டையலாக் பேச முடியும்.. என ட்ரோல் மீம்களை போட்டு அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை வெச்சு செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X