எத்தனை அரசியல் வாரிசுகள் வந்தாலும்..SAC-யோட வாரிசு கிட்ட நெருங்க முடியாது..போஸ்டரால் பரபரப்பு!

சென்னை : விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா, பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நேரத்தில் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய போஸ்டரால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

வாரிசு படம் பொங்கல் பண்டியையொட்டி ஜனவரி 12ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில், ரஞ்சிதமே பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்து படத்தின் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

வாரிசு இசை வெளியீட்டு விழா

வாரிசு இசை வெளியீட்டு விழா

வாரிசு இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில், எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அம்மா ஷோபா ஆகியோரை கைகொடுத்து விஜய் வரவேற்றார். தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் விஜய் பேசிக்கொள்ளாத நிலையில், பெற்றோரை விஜய் வரவேற்றது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஜொலித்தது அரங்கம்

ஜொலித்தது அரங்கம்

இசை வெளியீட்டு விழாவிற்காக நேரு உள்விளையாட்டு அரங்கம் வண்ண விளக்குகளால் ஜொலித்தது. விளையாட்டு அரங்க வாசலில் விஜய் ரசிகர்கள் போஸ்டரை கையில் ஏந்தி தீ தளபதி என கோஷமிட்டனர். வெளியில் ரசிகர்கள் அலப்பறை கொடுக்க, அரங்கத்திற்குள் ரசிகர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக செல்போன் டார்ச் அடித்து ஃபிளாஷ் அடித்தனர். இது ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

மாஸ் எண்ட்ரி

மாஸ் எண்ட்ரி

நடிகர் விஜய் மேடைக்கு மாஸ் எண்ட்ரி கொடுத்தார். மேடையில் தோன்றிய விஜய்யை கைத்தட்டி , விசில் அடித்து ஆரவாரம் செய்து ரசிர்கள் வரவேற்றனர். அழகான சிரிப்புடன் மாஸாக விஜய் வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்த விழாவில், பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா என பலரும் கலந்து கொண்டனர்.

சர்ச்சைக்குரிய போஸ்டர்

சர்ச்சைக்குரிய போஸ்டர்

இந்நிலையில், வாரிசு படத்தின் இசைவெளியீட் விழா கோலாகலமாக நடந்து கொண்டு இருக்க, மதுரையில் விஜய் ரசிகர் ஒட்டியுள்ள சர்ச்சைக்குரிய போஸ்டர் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், எத்தனை அரசியல் வாரிசுகள் வந்தாலும் SAC-யோட வாரிசு கிட்ட நெருங்க முடியாது என்று மதுரை முழுக்க போஸ்டரை ஒட்டி உள்ளனர். உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்களை தாக்கும் வகையில் உள்ளன இந்த போஸ்டர் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X