எடுத்து வைங்கடா அந்த மைக்கை.. வாரிசு இசை வெளியீட்டு விழா.. ஹாட் அப்டேட் கொடுத்த ராஜு பாய்!
சென்னை: நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ம் தேதி நடைபெறும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது அதனை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளார் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு ஜெயமோகன்.
நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கிற்கே சென்று அவரை சந்தித்ததாக கூறியிருந்தார் ராஜு ஜெயமோகன்.
இந்நிலையில், பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவையே தொகுத்து வழங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது என்கிற மகிழ்ச்சியை ஹாட் அப்டேட்டாக கொடுத்துள்ளார்.

விஜய்யின் வாரிசு
தில் ராஜு தயாரிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு, சம்யுக்தா, சங்கீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. வாரிசு படத்தில் இருந்து இதுவரை வெளியான இரு பாடல்களுமே ரசிகர்களை ஆட்டம் போட வைத்த நிலையில், இசை வெளியீட்டு விழா எப்போ என்கிற ஹாட் அப்டேட் கிடைத்துள்ளது.

வாரிசு ஆடியோ லாஞ்ச்
விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி பாடல்கள் அதிரடி ஹிட் அடித்துள்ள நிலையில், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகவும், ஹைதராபாத்திலும் ஒரு பெரிய விழாவுக்கு தில் ராஜு ஏற்பாடு செய்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிசம்பர் 24
வாரிசு படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ம் தேதி நடைபெற உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது பிக் பாஸ் சீசன் 5ன் டைட்டில் வின்னர் ராஜு பாய் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

ராஜு பாய் சம்பவம்
நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான ராஜு ஜெயமோகன் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தளத்திலேயே விஜய்யை சந்தித்ததாக பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவையே தொகுத்து வழங்கும் பெரிய பொறுப்பு தனக்கு கிடைத்துள்ளதாக ஹாட் அப்டேட்டை வெளிப்படுத்தி உள்ளார்.

காசேதான் கடவுளடாவுக்கு போட்டியா?
விஜய்யின் ஒரு அப்டேட் வந்தா உடனே அஜித் பட அப்டேட் வருவதும், அஜித் பட அப்டேட் வந்ததும் விஜய் பட அப்டேட் வெளியாகி டிரெண்டாவதும் நடைபெற்று வருகிறது. சற்று முன் காசேதான் கடவுளடா பாடல் வெளியாகி டிரெண்டான நிலையில், அந்த டிரெண்டிங்கை தற்போது #VarisuAudioLaunch அப்டேட் பின்னுக்குத் தள்ளி உள்ளது. இப்படி இரு பிரபலங்களும் பக்காவாக மாறி மாறி போட்டி போட்டு வருகின்றனர். பொங்கலுக்கு கிளாஷ் எப்படி இருக்கப் போகிறதோ?


Click it and Unblock the Notifications











