வாரிசு பாக்ஸ் ஆபிஸ்: ஆல் ஏரியாலயும் ஐயா தான் கில்லி... மீண்டும் நிரூபித்த விஜய்
சென்னை: விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
நேற்று ரிலீஸான வாரிசு படத்தின் FDFS காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது.
வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் ஃபேமிலி ஆடியன்ஸ்களுக்கான திரைப்படமாக உருவாகியுள்ள வாரிசு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், வாரிசு படத்தின் முதல் நாள் கலெக்ஷன் குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன.

அப்டேட்டட் சீரியல் வெர்ஷன்
இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வரிசு, அஜித்தின் துணிவு படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளன. நேற்று ரிலீஸான இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. விஜய்யின் வாரிசு படத்தை வம்ஷி பைடிப்பள்ளி இயக்கியுள்ளார், தில் ராஜூ தயாரித்துள்ளார். விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், குஷ்பூ உள்ளிட்ட பலர் நடித்துள்ள வாரிசு, இந்தி சீரியலின் அப்டேட்டட் வெர்ஷன் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.

பாக்ஸ் ஆபிஸில் சாதனை
விஜய்யின் படங்களுக்கு எப்போதுமே முதல் நாளில் சிறப்பான ஓபனிங் கிடைப்பது வழக்கம். வாரிசு படத்திலும் அதுவே நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் தொடர்ந்து ஆக்ஷன் ஜானர் படங்களிலேயே நடித்து வந்த நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்ப சென்டிமெண்ட் உள்ள ஒரு படத்தில் நடித்துள்ளார். இதுவே வாரிசு படத்திற்கு தரமான ஓபனிங் கிடைக்க காரணமாக அமைந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் மாஸ் காட்டியுள்ளதாம் வாரிசு.

சொல்லி அடித்த கில்லி
வாரிசு படத்தின் புக்கிங் ஆரம்பித்ததுமே அடுத்தடுத்து வசூலில் சாதனை படைத்து வந்ததாக சொல்லப்பட்டது. இப்போது அதனை கன்ஃபர்ம் செய்யும் விதமாக முதல் நாளில் 25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் வாரிசு படத்தின் கலெக்ஷன் திரையரங்க உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அடுத்தடுத்து பொங்கல் விடுமுறைகள் இருப்பதால், வாரிசு வசூல் சீக்கிரமே 100 கோடி ரூபாயை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணனை திருத்தும் தம்பி
வாரிசு படத்தின் கதை படி, விஜய் ஜாலியான ட்ராவலராக ஊர் சுற்றி வருகிறார். அப்பா சரத்குமார் தனது பிஸினஸிலும் குடும்பத்திலும் சில பிரச்சினைகள் இருப்பதாக சொல்ல, அவரது விருப்பத்திற்காக வீட்டிற்கு வருகிறார் விஜய். அதோடு இல்லாமல் தொழிலுக்குப் போட்டியாக வரும் வில்லன் பிரகாஷ்ராஜையும் திருத்திவிடுகிறார். அதேமாதிரி வீட்டில் இருந்தே வில்லத்தனம் செய்த அண்ணன் ஷாமையும் சுளுக்கு எடுக்கிறார். இதுதான் வாரிசு படத்தோட கதை. வழக்கமான ஒரு கதையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து எடுத்து, அத பாக்ஸ் ஆபிஸ்லயும் ஜெயிக்க வச்சிருக்கார் வம்ஷி பைடிப்பள்ளி.


Click it and Unblock the Notifications











