Varisu Box Office: 13 நாட்களில் வாரிசு படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா? தூள் கிளப்புறாரே!

சென்னை: நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் 13 நாட்கள் ஆகியும் உலகளவில் வசூல் வேட்டையை நிகழ்த்துவதை நிறுத்தவே இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாரிசு திரைப்படம் அதிகாரப்பூர்வமாக 11 நாட்களில் 250 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்து இருந்தார்.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் வெளியான விஜய்யின் வாரிசு திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் குடும்பங்கள் பார்க்கக் கூடிய ரீதியில் படம் ஜாலியாக இருந்த நிலையில், நேற்று திங்கட்கிழமையும் கணிசமான தொகையை வசூல் செய்துள்ளது.

முதல் பிளாக்பஸ்டர்

முதல் பிளாக்பஸ்டர்

2023ம் ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் திரைப்படமாக நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் மாறி உள்ளது. தில் ராஜு தயாரிப்பில் இயக்குநர் வம்சி இயக்கிய வாரிசு திரைப்படத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமன் இசையில் இடம்பெற்ற ரஞ்சிதமே, ஜிமிக்கி பொண்ணு உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளன.

ஆட்ட நாயகன்

ஆட்ட நாயகன்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் துணிவு திரைப்படமும் விஜய்யின் வாரிசு திரைப்படமும் நேருக்கு நேர் மோதின. கடந்த ஆண்டு வெளியான வலிமை மற்றும் பீஸ்ட் படங்களை போல இந்த ஆண்டும் இரண்டு படங்களும் கடுமையான விமர்சனங்களை சந்தித்தன. விமர்சனங்களை கடந்த நிலையில் வாரிசு படம் வசூல் செய்து நடிகர் விஜய்யை ஆட்ட நாயகனாக மாற்றி உள்ளது.

அதிகாரப்பூர்வ வசூல்

அதிகாரப்பூர்வ வசூல்

வாரிசு திரைப்படம் 11 நாட்களில் 250 கோடி ரூபாய் வசூல் செய்து அபார சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. வாரிசு திரைப்படம் தமிழ்நாட்டிலும் 110 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாரிசு 13 நாள் வசூல்

வாரிசு 13 நாள் வசூல்

இந்நிலையில் வாரிசு படம் வெளியாகி 13 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை ஒட்டுமொத்தமாக 266 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வாரம் குடியரசு தின விடுமுறை உள்ள நிலையில், வாரிசு படம் மீண்டும் வசூல் வேட்டை நடத்தும் என்றும் இந்த வார இறுதியிலும் பெரிய தமிழ் படங்கள் வெளியாகாத நிலையில், 3வது வாரமும் வாரிசு வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதான் தடையாக இருக்குமா?

பதான் தடையாக இருக்குமா?

ஷாருக்கானின் பதான் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், பாலிவுட்டில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என தெரிகிறது. தமிழ்நாட்டில் ஷாருக்கானின் பதான் திரைப்படம் எந்தளவுக்கு துணிவு மற்றும் வாரிசு படங்களின் வசூலில் கை வைக்கும் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

தளபதி 67 அப்டேட்

தளபதி 67 அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு பூஜை போடப்பட்ட புகைப்படங்கள் வெளியாகும் என தெரிகிறது. இந்த படம் எல்சியூ என்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், கமல்ஹாசன், பகத் ஃபாசில் மற்றும் சூர்யா உள்ளிட்ட நடிகர்களும் கேமியோவாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X