Varisu box office day 2: அஜித்தின் துணிவால் வந்த சோதனை... திருப்பிக்கொடுத்த விஜய்

சென்னை: விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் நேற்று முன்தினம் 11ம் தேதி ரிலீஸானது. வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வாரிசு ஃபேமிலி சென்டிமெண்ட் ஜானரில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. மேலும் அதே 11ம் தேதி அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியானதால், விஜய்யின் வாரிசு வசூல் கொஞ்சம் பிரேக்டவுன் ஆனதாக சொல்லப்படுகிறது.

விஜய்யின் வாரிசு பொங்கல்

விஜய்யின் வாரிசு பொங்கல்

பீஸ்ட்டை தொடர்ந்து விஜய் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். வம்ஷி பைடிப்பள்ளி இயக்கியுள்ள வாரிசு, தமிழ், தெலுங்கு மொழிகளில் பேமிலி சென்டிமெண்ட் படமாக உருவாகியுள்ளது. தில் ராஜூவின் பிரம்மாண்டமான தயாரிப்பில் விஜய்யுடன் ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், 11ம் தேதி வெளியான வாரிசு பொங்கல் பண்டிகைக்கான ஃபெஸ்டிவல் மோட் திரைப்படம் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

விஜய்யின் படங்களுக்கு எப்போதுமே முதல் நாளில் சிறப்பான ஓபனிங் கிடைப்பது வழக்கம். அதன்படி வாரிசு படத்துக்கும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரம் அஜித்தின் துணிவும் 11ம் தேதியே வெளியானதால், வாரிசு வசூலில் கொஞ்சம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும் வாரிசு, துணிவு இரண்டு படங்களுக்கும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் நல்ல ரிசல்ட் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாரிசு வசூல் நிலவரம்

வாரிசு வசூல் நிலவரம்

வாரிசு திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் நாளில் 21 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சொல்ல்ப்படுகிறது. அதேபோல் இந்தியா முழுவதும் 31 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்துள்ளதாம். மேலும் உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் 46 கோடி வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அஜித்தின் துணிவு ரிலீஸ் ஆகாமல் இருந்திருந்தால் வாரிசு வசூல் மேலும் அதிகரித்திருக்கும் என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்ற்ன.

இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ்

இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ்

இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளிலும் வாரிசு படத்தின் கலெக்‌ஷன் சொல்லும்படி அமைந்துள்ளதாம். அதன்படி இரண்டாவது நாளில் மட்டும் உலகம் முழுவதும் 30 முதல் 35 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது மொத்தமாக முதல் இரண்டு நாட்களில் 76 முதல் 81 கோடி ரூபாய் வரை பாக்ஸ் ஆபிஸில் கலெக்‌ஷன் செய்துள்ளது வாரிசு. இதனால் வரும் நாட்களில் வாரிசு படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் துணிவு 71 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படும் நிலையில், விஜய்யின் வாரிசு 81 கோடி வரை கலெக்‌ஷன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X