Varisu box office day 3: 2023ம் ஆண்டில் முதல் 100 கோடி கிளப்பில் இணையும் விஜய்...?

சென்னை: விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

அதேநாளில் அஜித்தின் துணிவு திரைப்படமும் ரிலீஸானதால் பாக்ஸ் ஆபிஸில் அதிகமான எதிர்பார்ப்பு காணப்பட்டது.

விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை வம்ஷி பைடிப்பள்ளி இயக்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸான வாரிசு, இந்தாண்டின் முதல் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 தீயாக வந்த தளபதி

தீயாக வந்த தளபதி

விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான பீஸ்ட் கடும் விமர்சனங்களை சந்தித்தது. வழக்கம்போல ரசிகர்களிடம் இருந்த எதிர்பார்ப்பால் வசூலில் மாஸ் காட்டினாலும், விஜய் கேரியரில் பீஸ்ட் பெயிலியர் என்றே சொல்லப்படுகிறது. இதனால் அடுத்து கண்டிப்பாக பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்க வேண்டும் என காத்திருந்த விஜய், வம்ஷி பைடிப்பள்ளி இயக்கிய வாரிசு படத்தில் இணைந்தார். இந்தக் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளதால் ஆரம்பம் முதலே வாரிசு படத்துக்கு எதிர்பார்ப்பு காணப்பட்டது.

 வாரிசு பாக்ஸ் ஆபிஸ்

வாரிசு பாக்ஸ் ஆபிஸ்

தமிழ், தெலுங்கு மொழிகளில் பேமிலி சென்டிமெண்ட் படமாக உருவாகியுள்ள வாரிசு படத்தை தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். விஜய்யுடன் ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், யோகி பாபு என பெரிய ஸ்டார் காஸ்ட்டிங்கில் உருவான இந்தப் படம் கடந்த 11ம் தேதி ரிலீஸானது. விஜய்யின் வாரிசுடன் அஜித்தின் துணிவு திரைப்படமும் 11ம் தேதியே ரிலீஸானது. இதனால் இரண்டு படங்களுக்குமான பாக்ஸ் ஆபிஸ் போட்டியாக இந்தாண்டு பொங்கல் அமைந்தது.

 மூன்றாவது வசூல் நிலவரம்

மூன்றாவது வசூல் நிலவரம்

விஜய்யின் படங்களுக்கு எப்போதுமே முதல் நாளில் சிறப்பான ஓபனிங் கிடைப்பது வழக்கம். அதன்படி முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் வாரிசு ரூ.21 கோடி வசூல் செய்ததாக சொல்ல்ப்படுகிறது. மேலும் இந்தியா முழுவதும் 31 கோடி ரூபாயும், உலகம் முழுவதும் 46 கோடி வரை வசூலித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளிலும் வாரிசு உலகம் முழுவதும் 30 முதல் 35 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 2023ல் முதல் 100 கோடி?

2023ல் முதல் 100 கோடி?

முதல் இரண்டு நாட்களில் மொத்தம் 70 முதல் 75 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்துள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், மூன்றாவது நாளில் உலகம் முழுவதும் 10 முதல் 15 கோடி வரை வசூலித்துள்ளதாம். அதன்படி மூன்று தினங்களில் 85 முதல் 90 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்துள்ளது வாரிசு. இதனால் இந்த வார இறுதிக்குள் 100 கோடி வசூலை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் 2023ம் ஆண்டில் பாக்ஸ் ஆபிஸின் முதல் 100 கோடி ரூபாய் கலெக்‌ஷன் என்ற பெருமையை வாரிசு திரைப்படம் தட்டித்தூக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X