twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாரிசு படத்தில் குஷ்பூவோட போர்ஷன் 17 நிமிடங்கள்.. விரைவில் வெளியிடும் படக்குழு!

    |

    சென்னை : விஜய்யின் வாரிசு படம் கடந்த 11ம் தேதி ரிலீசாகி 5 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது.

    இதையொட்டி படக்குழு சென்னை ஈசிஆரில் சக்சஸ் மீட்டை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஜெயசுதா, ஷாம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளன.

    தயாரிப்பாளர் தில் ராஜுக்கு விடிவி கணேஷ் கற்றுக் கொடுத்த பாடம்.. வாரிசு சக்சஸ் மீட்டில் கலகலப்பு! தயாரிப்பாளர் தில் ராஜுக்கு விடிவி கணேஷ் கற்றுக் கொடுத்த பாடம்.. வாரிசு சக்சஸ் மீட்டில் கலகலப்பு!

    விஜய்யின் வாரிசு படம்

    விஜய்யின் வாரிசு படம்

    நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஜெயசுதா, ஷாம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களுடன் உருவாகி கடந்த 11ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசான படம் வாரிசு. பேமிலி சென்டிமெண்டை மையமாக வைத்து இந்தப் படத்தை பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கியுள்ளார்.

    பேமிலி சென்டிமெண்ட்

    பேமிலி சென்டிமெண்ட்

    பேமிலி சென்டிமெண்டை மையமாக வைத்து படம் உருவாகியிருந்தாலும் படத்தில் விஜய் படத்திற்கேயுரிய ஆக்ஷன், காமெடி உள்ளிட்ட அம்சங்களும் வெகு சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகு சிறப்பாக ரசிகர்களை கவர்ந்துள்ளன.

     ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்

    ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்

    படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ள நிலையில், ரஞ்சிதமே, தீ தளபதி உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து யூடியூவில் அதிகமான வியூஸ்கள் மற்றும் லைக்ஸ்களை பெற்றுள்ளன. படத்தில் நடிகர் விஜய் பாடல் காட்சிகளில் நடனத்தில் தெறிக்க விட்டுள்ளார். அவருக்கு ஈடுகொடுத்து ராஷ்மிகாவும் நடனமாடியுள்ளார்.

    ரூ.150 கோடி வசூல்

    ரூ.150 கோடி வசூல்

    படம் இத்தகைய பல சிறப்பம்சங்களுடன் வெளியான நிலையிலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆயினும் வசூல்மழையில் தெறிக்க விட்டுள்ளது. அஜித்தின் துணிவு படத்துடன் மோதிய நிலையிலும் 5 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலை எட்டி சாதித்துள்ளது. இதை படத்தின் தயாரிப்பு தரப்பு பெருமையுடன் பகிர்ந்துள்ளது.

    வாரிசு படத்தில் குஷ்பூ

    வாரிசு படத்தில் குஷ்பூ

    இந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என்று ஆரம்பத்தில் குஷ்பூ பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். ஆனால் ட்ரெயிலரில் அவரை காண முடிந்தது. இந்நிலையில் படம் தற்போது வெளியான நிலையில் அவரது போர்ஷன் அதிகமாக இல்லாத நிலையில், ரசிகர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    விரைவில் குஷ்பூ காட்சிகள் வெளியீடு

    விரைவில் குஷ்பூ காட்சிகள் வெளியீடு

    இந்நிலையில் படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய படத்தின் இயக்குநர் வம்சி படிப்பள்ளி, படத்தின் முதல் பாதியில் குஷ்பூவின் போர்ஷன் 17 நிமிடங்கள் இருந்ததாகவும் மிகவும் அழகான காட்சிகளாக அமைந்திருந்த அவை, படத்தின் நீளம் கருதி அவை நீக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் டெலிட்டட் காட்சிகளாக அவை வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

    English summary
    Varisu movie director Vamshi says, Kushbhu portions in the movie to be released soon
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X