வாரிசு இயக்குநர் போட்ட அதிரடி உத்தரவு..இனிமேலும் அது நடக்க வாய்ப்பே இல்லை!
சென்னை : வாரிசு திரைப்படத்திலிருந்து புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி உள்ளதால் இயக்குநர் வம்சி படக்குழுவுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
வாரிசு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலும், மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்திலும் நடைபெற்று வருகிறது.
இப்படத்தை வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், அடுத்த படத்தில் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்புடன் பணியாற்றி வருகிறார் விஜய். அவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. பிரபல தெலுங்கு இயக்குநரும், தமிழில் தோழா படத்தை இயக்கியவருமான வம்சி தான் இப்படத்தை இயக்குகிறார்.

வாரிசு
வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை. இதேபோல் பிரபு, பிரகாஷ் ராஜ், ஷியாம், சரத்குமார், சம்யுக்தா, குஷ்பு, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. தில் ராஜு தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

லீக்கான வீடியோ
வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும், வீடியோக்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. நேற்று முன்தினம் மருத்துவமனையில் நடைபெற்ற படப்பிடிப்புதள வீடியோ வெளியானது. அந்த வீடியோவில், நடிகர் விஜய் மற்றும் பிரபு ஆகியோர் உயிருக்கு போராடும் ஒருவரை ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து பதறியபடி லிப்டுக்குள் ஓடுகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் டிராண்டானது.

அதிரடி உத்தரவு
எவ்வளவுத்தான் தீவிரமாக கண்காணித்தாலும் எப்படியாவது வீடியோ மற்றும் போட்டோ லீக்காவதால், அதிருப்தி அடைந்துள்ள இயக்குநர், வாரிசு படப்பிடிப்பில் பாதுகாப்பை பலப்படுத்தியது மட்டுமின்றி, செல்போன் மற்றும் பிற கேஜெட்டுகளுக்கு முழு தடை விதித்துள்ளார். இனிமேல் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் செல்போனை பயன்படுத்த முடியாது. இதனால், இனிமே லீக்காக வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











