ரஞ்சிதமே பாடலை பாடியது இவங்களா?..அட இத்தனை ஹிட் பாடலை பாடியிருக்காங்களா?
சென்னை : வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடலை நேற்று முன்தினம் படக்குழு வெளியிட்டிருந்தது. விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான 'ரஞ்சிதமே' பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.
இந்த பாடல் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூட்டியூப்பில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.
இந்த பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த பாடலை பாடிய பாடகி பற்றி ரசிகர்கள் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

பாடகி மானசி
மும்பையில் பிறந்த மானசி தனது இரண்டு வயதிலேயே இசையின் மீது தீராத காதல் கொண்டிருந்தார். இசையின் மீது இவருக்கு இருக்கும் ஆர்வத்தை புரிந்து கொண்ட மானசியின் பெற்றோர் இவரை இசை பள்ளியில் சேர்த்துவிட்டனர். ஒரு இந்துஸ்தானி பிண்ணணி பாடகியான மானசி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய பல மொழிகளில் சுமார் 170 பாடல்களை பாடி உள்ளார். 2013 ஆம் ஆண்டில் தெலுங்கு மொழி படத்தின் மூலம் மானசி சினிமாவில் அறிமுகமானார்.

காக்கி சட்டை படத்தில்
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அன்னக்கொடி திரைப்படத்தில் ஜிவி பிரகாஷுடன் இணைந்து தமிழில் தனது முதல் பாடலை பாடினார். இதையடுத்து தமிழில் பல ஹிட் பாடல்களை மானசி பாடி உள்ளார்.காக்கி சட்டை படத்தில் வரும், கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பார்க்கணும் டி பாடலையும், இசைஞானி இளையராஜாவின் 1000வது படமான தாரை தப்பட்டை படத்தில் வரும் ஆட்டக்கார மாமன் பொண்ணு பாடலையும் இவரே பாடி உள்ளார்.

பாடகி மட்டுமில்லை
இவர் பாடகி மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகைகளுக்கு பிண்ணணிக் குரலும் கொடுத்திருக்கிறார். சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால், திரிஷா, நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி, லஷ்மி மேனன் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி
இந்நிலையில், தமன் இசையில் விஜய்யுடன் மானசி பாடிய ரஞ்சிதமே பாடல் நேற்று முன்தினம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்து வருகிறது. இப்பாடல் வெளியான 24 மணி நேரத்தில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. இதனை விஜய்யின் ரசிகர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











