வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ ரிலீஸ்.. எப்படி இருக்கு ரஞ்சிதமே பாடல்?
சென்னை: தீபாவளி ட்ரீட்டாக வரும் என எதிர்பார்க்கப்பட்ட வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ கொஞ்சம் தாமதம் ஆனாலும், நவம்பர் 3ம் தேதி மாலை 6.30 மணிக்கு ஷார்ப்பாக வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.
வாத்தி கம்மிங், அரபிக் குத்து பாடல்களை போல விரைவில் வெளியாகவுள்ள வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் எத்தனை மில்லியன் வியூஸ் கடந்து சாதனைகளை படைக்கப் போகிறதோ தெரியவில்லை.
ஆனால், விஜய்யின் வாய்ஸில் வெளியாகி உள்ள இந்த பாடல் புரமோவே ஏகப்பட்ட ரெக்கார்டுகளை அடுத்த 24 மணி நேரத்துக்குள் அடித்து நொறுக்கும் என்பது கன்ஃபார்ம்.

முந்தும் விஜய்
வரும் பொங்கலுக்கு அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் வெளியாக உள்ள நிலையில், வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரமோ தற்போது வெளியாகி உள்ளது. துணிவு படத்தை முந்தி வாரிசு படத்தின் அப்டேட் வெளியாகி உள்ள நிலையில், இதே போல துணிவு படத்திற்கு முன்னதாக வாரிசு படம் வெளியாகுமா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இருவரும் இன்னமும் ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் செய்யவில்லை.

வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள்
வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். டோலிவுட் படங்களுக்கு தாறுமாறாக இசையமைத்து வரும் தமன் இசையில் உருவாகி உள்ள ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அட்டகாசமான ப்ரமோ தற்போது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

விஜய் வாய்ஸ்
குட்டி ஸ்டோரி, அரபிக் குத்து வரிசையில் விஜய் வாய்ஸில் உருவாகி உள்ள வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தான் தற்போது வெளியாகி உள்ளது. ராஷ்மிகா மந்தனா உடன் விஜய் வெறித்தனமாக ஆட்டம் போடும் காட்சிகள் இந்த பாடலில் நிறைந்துள்ளது. தற்போது வெளியாகி உள்ள 30 செகண்ட்ஸ் ப்ரமோவில் விஜய்யின் நடன காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

உதடு வலிக்க கொஞ்சணுமே
வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள நிலையில், முதல் பாடலே அவரே வர்ணித்து பாடும் பாடலாக அமைந்துள்ளது. "ரஞ்சிதமே.. ரஞ்சிதமே மனசை கலைக்கும் மந்திரமே.. ரஞ்சிதமே.. ரஞ்சிதமே உன்னை உதடு வலிக்க கொஞ்சணுமே என விஜய்யின் சிக்னேச்சர் ஸ்டெப்பையே பாடல் வரிகளாக மாற்றி இருக்கிறார் பாடலாசிரியர் விவேக்.

அந்த ஸ்டெப்
ரஞ்சிதமே ப்ரமோ பாடல் வெறும் 30 செகண்ட் மட்டுமே வந்தாலும், அதிலும் விஜய்யின் அந்த டான்ஸ் ஸ்டெப் பார்த்த மாத்திரத்திலேயே ரசிகர்களை கவர்ந்துள்ளது. வரும் நவம்பர் 5ம் தேதி வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ரஞ்சிதமே முழு பாடலும் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











