என்னாது வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிளும் காப்பியா? அந்த ஃபேமஸ் குத்துப்பாட்டா.. கலாய்க்கும் அஜித் ஃபேன்ஸ்!

சென்னை: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்தாலும், ஃபர்ஸ்ட் சிங்கிள் வந்தாலும் ஏன் படமே வெளியானாலும் இந்த இடம் இந்த இடத்தில் இருந்து சுடப்பட்டது என ரசிகர்கள் உடனடியாக கண்டுபிடித்து ட்ரோல் செய்து விடுவர்.

இந்நிலையில், வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக விஜய்யின் குரலில் வெளியாகி உள்ள ரஞ்சிதமே பாடலும் ஒரு பிரபல குத்துபாட்டின் காப்பி என அஜித் ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

எப்படி இருந்தாலும், பாட்டு பட்டையை கிளப்புது என விஜய் ரசிகர்கள் நெகட்டிவிட்டிகளை ஒதுக்கி விட்டு வைப் பண்ணி வருகின்றனர்.

5 மில்லியன் வியூஸ்

5 மில்லியன் வியூஸ்

வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ரஞ்சிதமே பாடல் நவம்பர் 5ம் தேதி மாலை 5.30 மணிக்கு வெளியான நிலையில், 8 மணிக்கே 5 மில்லியன் வியூஸ் கடந்து அபார சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அட்டகாசமான ஹாட் அப்டேட்டை வெளியிட்டு விஜய் ரசிகர்களை மேலும், வெறியேற்றி வருகிறது. 24 மணி நேரத்திற்கும் எத்தனை ரெக்கார்ட்டுகள் அடித்து நொறுக்கப்பட போகிறதோ தெரியவில்லை.

சாமியாட்டம்

சாமியாட்டம்

தளபதி விஜய் சும்மாவே வெறித்தனமாக நடனமாடுவார். அவரது ஃபுல் எனர்ஜியையும் வெளிப்படுத்தும் வகையில், கடைசியில் 1 நிமிஷத்துக்கு சாமியாட வைத்துள்ளார் இசையமைப்பாளர் தமன். அரபிக் குத்து பாடலுக்கு அடுத்து அடுத்த ஹிட் சாங் கிடைச்சிடுச்சு என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ராஷ்மிகா செம க்யூட்

ராஷ்மிகா செம க்யூட்

என்ன மாமா உங்க ஆட்டத்துக்கு உலகமே காத்திருக்க, இது போதுமா என ராஷ்மிகா மந்தனா உசுப்பேற்றி விட விஜய் போடும் அந்த கடைசி ஒரு நிமிட டான்ஸை காட்டாமல் மானஸி பாடுவதை நைஸாக காட்டி தியேட்டரில் ரசிகர்களுக்கான பெரிய சர்ப்ரைஸை வைத்திருக்கிறார் இயக்குநர் வம்சி.

ரஞ்சிதமே பாட்டும் காப்பியா

ரஞ்சிதமே பாட்டும் காப்பியா

அனிருத் இசையில் எந்த பாடல் வந்தாலும் உடனடியாக காப்பி என கிளம்பிவிடும். ஆனால், இந்த முறை தமன் இசையமைத்த நிலையிலும், விஜய் பாடல் என்பதால், கேட்க அந்த பிரபல குத்தாட்ட பாடல் போலவே இருக்கு என்றும் அந்த பாடலின் காப்பி தான் ரஞ்சிதமே பாடல் என்றும் அஜித் ரசிகர்கள் கமெண்ட் போட்டு ட்ரோல் செய்யத் தொடங்கி உள்ளனர்.

மொச்சக்கொட்ட பல்லழகி

மொச்சக்கொட்ட பல்லழகி

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் & சித்ராவின் குரலில் வெளியான மொச்சக்கட்ட பல்லழகி எனும் செம குத்தாட்ட பாடலை அப்படியே கொஞ்சம் கொஞ்சம் மாற்றி தமன் ரஞ்சிதமே பாடலை போட்டுள்ளார் என கிண்டல் செய்து வருகின்றனர். ஆனால், அந்த பாட்டு வேற, இந்த பாட்டு வேற, இது காப்பி எல்லாம் இல்லை என விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

சில்லா சில்லா வரட்டும்

சில்லா சில்லா வரட்டும்

துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான சில்லா சில்லா பாடல் வரட்டும் அஜித் எப்படி டான்ஸ் ஆடுகிறார் என்று நாங்க பார்க்கிறோம் என விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை பதிலுக்கு கலாய்த்து வருகின்றனர். வரும் பொங்கலுக்கு தியேட்டர்கள் எல்லாம் ரத்தக்களரியாகாமல் இருந்தால் சரி தான் என நடுநிலையான ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X