வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியானது.. விஜய், ராஷ்மிகா வெறித்தனமான டான்ஸ்!
சென்னை: இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ரஞ்சிதமே பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்துள்ளது.
கார்த்தியின் தோழா, மகேஷ் பாபுவின் மகரிஷி உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் வம்சி உடன் முதன் முறையாக நடிகர் விஜய் கூட்டணி அமைத்துள்ள படம் தான் வாரிசு.
இந்த படத்துக்கு தமன் தாரை தப்பட்டை கிழிய தரமான இசையமைத்துள்ளது முதல் பாடலின் கடைசி சில நொடிகளில் பக்காவாக தெரிகிறது.

ரஞ்சிதமே ரிலீஸ்
விஜய் மற்றும் மானஸி குரலில் ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்துள்ள ரஞ்சிதமே பாடல் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோவே மிகப்பெரிய இம்பேக்ட்டை கிளப்பிய நிலையில், ரஞ்சிதமே பாடல் எத்தனை ரெக்கார்டுகளை படைக்கப் போகிறது என்பது இன்னும் கொஞ்சம் நேரத்தில் தெரிந்து விடும்.

தெறிக்கப் போகுது
விஜய் குரலில் உருவாகி உள்ள இந்த பாடலுக்கு ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து வெறித்தனமான டான்ஸையும் விஜய் போட்டுள்ளார். லிரிக் வீடியோவே இந்த மிரட்டு மிரட்டுதே, முழு பாடல் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இந்த வீடியோவுக்கு லைக்குகளை போட்டு அதிகளவில் பார்த்து டிரெண்டிங்கை தெறிக்க விட்டு வருகின்றனர்.

கரகாட்டக்காரி மாதிரி
விஜய்யின் காஸ்ட்யூமுக்கு இணையாக ராஷ்மிகா மந்தனாவின் காஸ்ட்யூம் இல்லை என்றும் கொஞ்சம் கரகாட்டாக்காரி காஸ்ட்யூம் போல இருக்கிறதே என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அல்லு அர்ஜுனின் புஷ்பா பாடல் போல இந்த படத்திலும் ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி தாண்டவம் ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செம சஸ்பென்ஸ்
முக்கியமான நடன அசைவுகளை கடைசியில் காட்டி விடுவார்களோ என ராஷ்மிகாவின் அந்த பேச்சுக்கு பிறகு ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பக்காவாக அதனை கட் செய்து விட்டனர். தியேட்டரில் நிச்சயம் அந்த கடைசி சில நிமிடங்கள் ரசிகர்கள் டான்ஸ் பண்ணியே கால் வலிக்கும் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பவே ரீல்ஸ் போட எத்தனை பிரபலங்கள் கிளம்பி உள்ளனர் என்பதையும் வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











