இனிமே ரஞ்சிதமே ரீல்ஸ் தான்.. இன்ஸ்டாவே திணற போகுது.. வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோவே தெறிக்குதே!

சென்னை: வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரீல்ஸ் தான் இனி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் ரீல்ஸாக தெறிக்கப் போகுது என விஜய் ரசிகர்கள் #VarisuFirstSingle டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், குஷ்பு, ஷாம், சம்யுக்தா, சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.

வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் நவம்பர் 5ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதன் அறிவிப்போடு கூடிய 30 நொடி ரஞ்சிதமே பாடல் ப்ரமோ தற்போது வெளியாகி உள்ளது.

ரஞ்சிதமே ரீல்ஸ் தான்

ரஞ்சிதமே ரீல்ஸ் தான்

இந்த சனிக்கிழமை முதல் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் என எல்லா சோஷியல் மீடியாவிலும் இனி ரஞ்சிதமே ரீல்ஸ் தான் ஆட்சி செய்யப் போகிறது என விஜய் ரசிகர்கள் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரமோவை பார்த்து எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளனர். அரபிக் குத்து பாடலுக்கு டான்ஸ் அமைத்த ஜானி மாஸ்டர் தான் ரஞ்சிதமே பாட்டுக்கும் கொரியோகிராஃபி.

வயதிலும்

வயதிலும்

நடிகர் விஜய்க்கு 48 வயதாகுது. ஆனால், இந்த வயதிலும் 20 வயது நடிகரை போல கஷ்டமான ஸ்டெப்புகளை போட்டு அரங்கையே அதிர வைத்து வருகிறார். விஜய் பாடியுள்ள பாடல் என்றாலே அது நிச்சயம் படத்தில் ஸ்பெஷலான பாடலாகத்தான் இருக்கும். தமன் இசையில் ஆரம்பமே அட்டகாசமாக இருக்கு என இந்த ரசிகர் பாராட்டி உள்ளார்.

38 நிமிஷத்தில் ரெக்கார்டு

38 நிமிஷத்தில் ரெக்கார்டு

38 நிமிடத்தில் 300k லைக்ஸ் பெற்று வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் ப்ரமோவே ரெக்கார்டு படைத்து விட்டது என விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன்ர். ஒவ்வொரு அரை மணி நேரமும் ஏகப்பட்ட மில்லியன் வியூஸ்களை இந்த பாடல் ப்ரமோவே கடந்து செல்லும் என்றும் சனிக்கிழமை செம சம்பவம் இருக்கு என ரசிகர்கள் டிரெண்டிங்கை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

திரை தீப்பிடிக்கும்

திரை தீப்பிடிக்கும்

விஜய் தரிசனம் கிடைத்த நிலையிலேயே விஜய் ரசிகர்கள் #VarisuFirstSingle ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து சோஷியல் மீடியா திரைகளை தீப்பிடிக்க வைத்து வருகின்றனர். விஜய்யின் வாய்ஸ் மற்றும் டான்ஸ் ஒன்றே ரசிகர்களுக்கு மிகப்பெரிய எனர்ஜியை கொடுக்கும் என கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X