ஓவர்சீஸ் மார்க்கெட்.. அஜித்தின் ’துணிவு’ விஜய்யின் ’வாரிசு’ கிட்ட கூட நெருங்க முடியாதாம்!

சென்னை: அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு என இரு முன்னணி நடிகர்களின் படங்கள் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகப் போவதாக அறிவித்துள்ளனர்.

இந்த போட்டியில் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸை யார் தட்டிச் செல்வார் என்றும் உலகளவில் யாருக்கு வசூல் அதிகமாக இருக்கும் என ஏகப்பட்ட கணிப்புகளும் ரசிகர்கள் சண்டையும் கிளம்பியுள்ளன.

இந்நிலையில், ஓவர்சீஸ் மார்க்கெட் அஜித்தை விட விஜய்க்கு சாதகமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிக தியேட்டர்கள் யாருக்கு

அதிக தியேட்டர்கள் யாருக்கு

போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிருவனம் வெளியிடுகிறது. அதன் காரணமாக ஒரே நாளில் வெளியானால் வாரிசு படத்தை விட துணிவு படத்துக்கே அதிக தியேட்டர்கள் கிடைக்கும் என்கிற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

தெலுங்கில் பலே திட்டம்

தெலுங்கில் பலே திட்டம்

எப்படி இருந்தாலும், துணிவு படத்திற்கு நிகரான தியேட்டர்கள் விஜய்யின் வாரிசு படத்துக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் இயக்குநர் வம்சி உள்ளிட்டோர் டோலிவுட்டை சேர்ந்தவர்கள் என்பதால் தெலுங்கில் மிகப்பெரிய அளவில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஒதுங்கிய ஆதிபுருஷ்

ஒதுங்கிய ஆதிபுருஷ்

நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் படமும் பொங்கல் ரேஸில் இருந்து ஒதுங்கிய நிலையில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கேரளாவில் விஜய்யின் வாரிசு படம் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் துணிவு திரைப்படம் தமிழ்நாட்டில் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓவர்சீஸ் எப்படி

ஓவர்சீஸ் எப்படி

ஓவர்சீஸை பொறுத்தவரையில் துணிவு படத்தை வாங்க பல பெரிய நிறுவனங்கள் முன் வரவே இல்லை என்றும் விவேகம், வலிமை உள்ளிட்ட அஜித்தின் படங்கள் ஓவர்சீஸில் பெரிய தோல்வியை சந்தித்ததன் விளைவு தான் இது என்றும் கூறுகின்றனர். அதே நேரத்தில் விஜய்யின் வாரிசு படத்துக்கு ஓவர்சீஸில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

280 கோடி

280 கோடி

விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், குஷ்பு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸே 280 கோடி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், நடிகரும் விநியோகஸ்தருமான ஆர்.கே. சுரேஷ் அதனை தனது ட்விட்டர் பக்கத்திலேயே ஷேர் செய்துள்ளார்.

முக்கியமான விஷயம்

முக்கியமான விஷயம்

துணிவு மற்றும் வாரிசு படங்களின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ், ஓவர்சீஸ், தமிழ்நாடு தியேட்டர் விபரங்கள் எல்லாம் எப்படி இருந்தாலும், படம் நல்லா இருக்கணூம் என்பது தான் எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று. மீண்டும் வலிமை, பீஸ்ட் போன்ற படங்களை அஜித் மற்றும் விஜய் கொடுத்தால் யாராலும் காப்பாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X