Varisu Hits 100 Crores: அடேங்கப்பா.. மின்னல் வேகத்தில் 100 கோடி கிளப்பில் இணைந்த விஜய்யின் வாரிசு!
சென்னை: நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் ஜனவரி 11ம் தேதி வெளியான நிலையில், நேற்று இந்தி மொழியிலும் வெளியானது. இந்நிலையில், வாரிசு திரைப்படம் வெறும் 3 நாட்களில் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளதாக ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
தோழா, மகரிஷி படங்களை இயக்கிய இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது.
முதல் நாளிலேயே உலகளவில் 35 முதல் 40 கோடி வரை வசூலை ஈட்டியதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் ட்ரீட்
இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பொங்கலுக்கு திரையரங்கம் மற்றும் திரை உலகம் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அளவுக்கு வாரிசு மற்றும் துணிவு என இரு பெரிய திரைப்படங்கள் கோலிவுட்டில் வெளியாகி உள்ளது. ஒருத்தர் பொங்கல் வின்னர் என்றும் ஒருத்தர் ரியல் வின்னர் என்றும் போட்டு இரண்டு நடிகர்களின் படங்களையும் தயாரிப்பாளர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கலவையான விமர்சனம்
வாரிசு மற்றும் துணிவு இரண்டு படங்களுக்கும் ஆரம்பத்தில் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்த நிலையில், அதன் பின்னர் படத்தில் உள்ள குறைகளை விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மாறி மாறி சொல்ல ஆரம்பித்து இரு படத்துக்கும் நெகட்டிவிட்டியை அதிகளவில் சோஷியல் மீடியாவில் பரப்பி விட்டனர். விமர்சகர்களும் இந்த இரு படங்களுக்கும் கலவையான விமர்சனங்களையே கொடுத்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ் போட்டி
அஜித், விஜய் படங்களுக்கு விமர்சனத்தை எல்லாம் பார்க்கக் கூடாது என்கிற புதிய விதியையே ரசிகர்கள் எழுதி வைத்து இருக்கின்றனர். விமர்சனம் அடி வாங்கிய நிலையில், அடுத்து பாக்ஸ் ஆபிஸ் போட்டியில் யார் ஒரு ரூபாய் அதிகம் என்கிற ரேஞ்சுக்கு பாக்ஸ் ஆபிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. அஜித் ரசிகர்கள் துணிவு படம் அதிக வசூல் என்றும் விஜய் ரசிகர்கள் வாரிசு படம் அதிகம் வசூல் என்றும் நம்பர் கேம் விளையாடி வருகின்றனர்.

வெளிப்படையாக சொல்லல
வாரிசு படத்துக்கும் துணிவு படத்துக்கும் முதல் நாள் வசூல் இதுதான் என்றும் 3 நாட்கள் வரை இவ்வளவு வசூல் தான் ஆகி உள்ளது என இரண்டு பட தயாரிப்பு நிறுவனங்களும் சொல்லவில்லை. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் டிராக்கர்கள் சொல்லும் பாக்ஸ் ஆபிஸ் நம்பர்கள் மற்றும் அந்த அந்த ஏரியா விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களும் சொல்லும் நிலவரம் தான் வெளியாகி உள்ளன.

100 கோடி வசூல்
இந்நிலையில், வாரிசு திரைப்படம் வெளியான 3 நாட்களில் 100 கோடி வசூலை ஈட்டி அதிரடி காட்டி உள்ளது. பொங்கல் விடுமுறை இன்று முதல் ஆரம்பித்துள்ள நிலையில், சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை வரை விடுமுறை உள்ள நிலையில், இன்னொரு 100 கோடி வசூல் கன்ஃபார்ம் என தெரிகிறது. அதற்கு மேல் அதிக வசூல் பெற்று இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்குமா? என்பது சந்தேகம் தான்.

தெலுங்கு ரிலீஸ்
வாரிசு திரைப்படம் நேற்று இந்தியில் வெளியான நிலையில், இன்று தெலுங்கில் வெளியாகிறது வாரிசு திரைப்படம். வீர சிம்ஹா ரெட்டி, வால்டர் வீரய்யா படங்களை பார்த்து நொந்து போயுள்ள தெலுங்கு ரசிகர்களுக்கு வாரிசு படம் ஆறுதலை தருமா? இல்லையா? என்பது நாளைய பாக்ஸ் ஆபிஸ் ரிசல்ட்டில் தெரியவரும்.


Click it and Unblock the Notifications











