64 வயதில்.. தொழிலதிபருடன் ரகசிய திருமணம்? போட்டோவால் வெடித்த சர்ச்சை !
சென்னை : வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்த ஜெயசுதா தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை ஜெயசுதா தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் நடிக்க வந்தார். இதைத்தொடர்ந்து கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான அரங்கேற்றம் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் பல படங்களிலும் ஜெயசுதா நடித்துள்ளார்.

நடிகை ஜெயசுதா
சினிமாவில் ஜெயசுதா நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அக்கா, தங்கை, அம்மா, சித்தி என அனைத்து வேடங்களிலும் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான விருது, சிறந்த துணை நடிகைக்கான விருது என பல விருதுகளை இவர் குவித்து வைத்துள்ளார்.

விவாகரத்தில் முடிந்த திருமணம்
தயாரிப்பாளர் வட்டே ரமேஷின் மைத்துனரான காகர்லபுடி ராஜேந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஜெயசுதா, கருத்துவேறுபாடு காரணமாக 1982ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்துவிட்டு தனிமையில் இருந்தார். அதைத் தொடர்ந்து 1985ம் ஆண்டு ஜீதேந்திராவின் உறவினரான நிதின் கபூரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இரண்டாவது கணவர் தற்கொலை
நிதின் கபூர், ஜெயசுதா தம்பதிகளுக்கு நிஹார், ஸ்ரேயான் என்று இரண்டு மகன்கள் பிறந்த நிலையில், நிதின் கபூர் 2017ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரின் பிரிவால் துவண்டுபோன ஜெயசுதா, மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். தனது முதல் மகன் நிஹாருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் தடபுடலாக திருமணம் செய்து வைத்தார்.

எல்லாம் வதந்தி
64 வயதான ஜெயசுதா மூன்றாவதாக தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் இணையத்தில் காட்டுத்தீ போல பரவின. இதனை மறுத்த ஜெயசுதா, அமெரிக்காவைச் சேர்ந்த பிலில் ரூல்ஸ் ஒரு தொழிலதிபர் என்றும், அவர் தன்னைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை உருவாக்கி வருவதாகவும் அதற்காகத்தான் தன்னுடன் வருவதாகவும் தெரிவித்து இருந்தார்.

ரகசியத் திருமணம்?
இந்நிலையில், அமெரிக்க தொழிலதிபர் பிலில் ரூல்சை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், அமெரிக்காவுக்கு ஜெயசுதா விடுமுறைக்கு சென்ற போது திருமணம் நடைபெற்றதாகவும் சொல்லப்படுகிறது. இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் வெளியானதால், திருமண வதந்தி காட்டுத் தீ போல பரவி உள்ளது. இந்த செய்தி குறித்து ஜெயசுதா எந்தவிதமான மறுப்பும் இதுவரை தெரிவிக்கவில்லை.

விஜய்யின் அம்மா
நடிகை ஜெயசுதா, வம்சி இயக்கத்தில் உருவாகி வசூலை வாரிக்குவித்த வாரிசு படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்துள்ளார். இப்படத்தில் விஜய், ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், சங்கீதா, குஷ்பு, பிரபு என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











