வாரிசு விஜய் அம்மாவுக்கு 3வது திருமணமா?... இந்த வயசுலையா… அதிர்ச்சியில் கோலிவுட்!

சென்னை : வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்த ஜெயசுதா மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக ஒரு தகவல் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

64 வயதான ஜெயசுதா தெலுங்கு திரைப்படம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இதைத்தொடர்ந்து கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான அரங்கேற்றம் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் ஜெயசுதா.

நடிகை ஜெயசுதா

நடிகை ஜெயசுதா

கோலிவுட் சினிமாவில் இவர் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அக்கா, தங்கை, அம்மா,சித்தி என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான விருது, சிறந்த துணை நடிகைக்கான விருது என பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்


நடிகை ஜெயசுதா தயாரிப்பாளர் வட்டே ரமேஷின் மைத்துனரான காகர்லபுடி ராஜேந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 1982ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்துவிட்டு தனிமையில் இருந்தார். அதன் 1985ம் ஆண்டு ஜீதேந்திராவின் உறவினரான நிதின் கபூரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

2வது கணவர் தற்கொலை

2வது கணவர் தற்கொலை

நிதின் கபூர், ஜெயசுதா தம்பதிகளுக்கு நிஹார், ஸ்ரேயான் என்று இரண்டு மகன்கள் பிறந்த நிலையில், நிதின் கபூர் 2017ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரின் பிரிவால் துவண்டுபோன ஜெயசுதா, மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். தனது முதல் மகன் நிஹாருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் தடபுடலாக திருமணம் செய்து வந்தார்.

3வது திருமணமா?

3வது திருமணமா?

இந்நிலையில், 64 வயதான ஜெயசுதா மூன்றாவதாக தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஜெயசுதாவும் தொழிலதிபரும் பல நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதைப் பார்த்தவர்கள் ஜெயசுதா மூன்றாவது திருமணம் என்று கூறினார். ஆனால் இதைப் பற்றி ஜெயசுதா எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

வாரிசு படத்தில்

வாரிசு படத்தில்

நடிகை ஜெயசுதா, வம்சி இயக்கத்தில் உருவாகி உள்ள வாரிசு படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்துள்ளார். ஜனவரி 11ந் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வசூலை வாரிக்குவித்து வருகிறது. இப்படத்தில் விஜய், ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்,சங்கீதா,குஷ்பு, பிரபு என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Read more about: jayasudha ஜெயசுதா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X