Don't Miss!
- News
அடுத்த மூவ் என்ன? ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பரபர ஆலோசனை
- Lifestyle
ஆண்களே! உங்க அக்குள் பகுதி அசிங்கமா கருமையா மாறாம தடுக்க... நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Sports
விராட் கோலி இனி தேவையில்லை.. இவருக்கு இனி வாய்ப்பு கொடுங்க.. தினேஷ் கார்த்திக் கருத்து
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விஜய்க்கு ரொம்ப பிடிச்சு போச்சு.. சுவாரஸ்யம் பகிர்ந்த இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி!
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி நாளைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது வாரிசு படம்.
இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி டைரக்ஷனில் உருவாகியுள்ள இந்தப் படம் தெலுங்கிலும் வாரிசுடு என்ற பெயரில் வரும் 14ம் தேதி ரிலீசாகவுள்ளது.
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அஜித்தின் படத்துடன் விஜய்யின் படம் நாளைய தினம் ரிலீசாகவுள்ளது ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.
விஜய்
அண்ணா..வாரிசு
படம்
பார்த்து
கண்கலங்கிய
தமன்..
ட்விட்டரில்
உருக்கமான
பதிவு!

விஜய்யின் வாரிசு படம்
நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், குஷ்பூ, ஜெயசுதா, பிரபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாரிசு. பொங்கல் பண்டிகையையொட்டி நாளைய தினம் சர்வதேச அளவில் வாரிசு படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. தெலுங்கிலும் வாரிசுடு என்ற பெயரில் இந்தப் படம் வரும் 14ம் தேதி ரிலீசாகவுள்ளது.

ரசிகர்களை கவர்ந்த ட்ரெயிலர்
இந்தப் படத்தை பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ளார். தில் ராஜு தயாரித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், கலவையான விமர்சனங்களையும் பெற்றுள்ளது. முன்னதாக படத்தின் பாடல்களும் யூடியூபில் வெளியாகி அதிகமான வியூஸ்களையும் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.

குடும்ப சென்டிமெண்ட் படம்
முன்னதாக விஜய் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து உருவாகியுள்ள வாரிசு படம் விஜய் ரசிகர்களை மட்டுமில்லாமல் பேமிலி ஆடியன்சையும் வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களை கவர்ந்த விஜய்
முன்னதாக கடந்த ஆண்டின் இறுதியில் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், ரசிகர்களை கவரும் வகையில் பேசியது அனைவரையும் கவர்ந்தது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் இணைந்துள்ளார் விஜய்.

விஜய்யை கவர்ந்த அவுட்புட்
இதனிடையே இந்தப் படத்தை இயக்கியுள்ள வம்சி பைடிப்பள்ளி படம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் படத்தின் அவுட்புட்டை பார்த்த விஜய் மிகவும் திருப்தியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் அதிகமான சீக்ரெட்ஸ் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ட்ரெயிலரில் ஏற்பட்ட அனுபவத்தை காட்டிலும் வித்தியாசமான அனுபவங்கள் படத்தில் காத்திருப்பதாகவும் வம்சி தெரிவித்துள்ளார்.

வம்சியை கவர்ந்த விஜய்யின் உழைப்பு
மேலும் ஆடியன்சின் நாடித்துடிப்பை உணர்ந்து நடிகர் விஜய் சூட்டிங் ஸ்பாட்டில் செயல்பட்டதை பார்த்து தான் மிகவும் வியப்படைந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு விஷயமும் சிறப்பாக அமையும் வகையில் விஜய் நடந்துக் கொண்டதாகவும் தான் மிகப்பெரிய நடிகர் என்பதை அவர் ஒருபோதும் நினைவில் கொள்ளாமல் உழைப்பதாகவும் அதனால்தான் அவர் இந்த இடத்தில் உள்ளதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.