திருவண்ணாமலை கோயிலில் சாமி தரிசனம் செய்த வாரிசு இயக்குநர்.. என்ன செய்தார் தெரியுமா?

சென்னை : நடிகர் விஜய்யின் வாரிசு படம் கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்தப் படத்தை பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கியிருந்தார். குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு படம் வெளியாகியிருந்தது.

கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வாரிசு படத்திற்கு பேமிலி ஆடியன்ஸ் அதிகளவில் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் வாரிசு படம்

விஜய்யின் வாரிசு படம்

நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஜெயசுதா, ஷாம் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 11ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் ரிலீசானது வாரிசு படம். அஜித்தின் துணிவு படத்துடன் மோதிய வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல்வேட்டை நடத்தி வருகிறது.

பேமிலி சென்டிமெண்ட்

பேமிலி சென்டிமெண்ட்

விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு வாரிசு படத்தின் பேமிலி சென்டிமெண்டை மையமாக கொண்ட படத்தில் நடித்துள்ளார். படத்தை பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ளார். தில் ராஜூ தயாரிப்பில் வெளியான இந்தப் படம் தற்போது சர்வதேச அளவில் 300 கோடி ரூபாய் வசூலை எட்டவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமர்சனங்களை சந்தித்த வம்சி

விமர்சனங்களை சந்தித்த வம்சி

படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் தற்போது ஜிமிக்கி பொண்ணு வீடியோ பாடல் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. இந்தப் படத்தின் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி படம் வெளியானபோது பல்வேறு விமர்சனங்களை சந்தித்திருந்தார். அதற்கு விளக்கமும் அளித்திருந்தார்.

ரசிகர்களின் அன்பிற்கு நன்றி

ரசிகர்களின் அன்பிற்கு நன்றி

இந்நிலையில் இத்தகைய விமர்சனங்களை எதிர்கொண்டு படம் சூப்பர்ஹிட் வெற்றியை கொடுத்துள்ளது. இந்நிலையில் தற்போது திருவண்ணாமலையில் குடும்பத்தினருடன் வம்சி சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரசிகர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையாரிடம் நன்றி

அண்ணாமலையாரிடம் நன்றி

ரசிகர்கள் தன்மீது வைத்த அன்பிற்காக அண்ணாமலையாரிடம் நன்றி கூற வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனக்கு சப்போர்ட் செய்த மீடியா நண்பர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது விஜய், தனது தளபதி 67 படத்தில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறப்பான இயக்குநர்

சிறப்பான இயக்குநர்

தெலுங்கில் பிரபலமான இயக்குநராக விளங்கும் வம்சி பைடிப்பள்ளி தமிழில் முன்னதாக கார்த்தி, நாகர்ஜுனா நடிப்பில் தோழா என்ற வெற்றிப் படத்தை கொடுத்துள்ளது தெரிந்த விஷயம்தான். தற்போது விஜய்யை வைத்தும் வெற்றிப் படத்தை கொடுத்துள்ள நிலையில், தமிழில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X