மீண்டும் லீக்கான வாரிசு படத்தின் சூட்டிங் வீடியோ.. இப்ப எந்த காட்சி வெளியாகியிருக்கு தெரியுமா?
விசாகப்பட்டினம் : நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா லீட் கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் வாரிசு.
இந்தப் படத்தில் குஷ்பூ, ராதிகா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
தற்போது படத்தின் நான்காவது கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் அங்கு எடுக்கப்பட்டு வருகின்றன.

வாரிசு படம்
நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, ராதிகா, சரத்குமார், ஷாம், பிரபு, பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துவரும் படம் வாரிசு. இந்தப் படத்தின் சூட்டிங், சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிலையில் தற்போது நான்காவது கட்டமாக விசாகப்பட்டினத்தில் சூட்டிங் நடைபெற்று வருகிறது.

ஸ்மார்ட் விஜய்
விசாகப்பட்டினத்தில் நடைபெறும் சூட்டிங்கில் பங்கேற்பதற்காக கடந்த வாரத்தில் விஜய் புறப்பட்டு சென்ற வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அந்த வீடியோவில் ஸ்மார்ட்டான விஜய்யை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அந்த வீடியோவை இணையத்தில் அதிகமாக ஷேர் செய்தனர்.

விசாகப்பட்டினத்தில் சூட்டிங்
தற்போது விசாகப்பட்டின துறைமுகத்தில் படத்தின் பைட் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் இருந்தே வாரிசு படத்தின் பல காட்சிகள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து லீக்காகி வருகின்றன. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு துறைமுகத்தில் எடுக்கப்பட்ட பைட் சீனின் புகைப்படங்கள் வெளியாகின.

மீண்டும் மீண்டும் லீக்காகும் காட்சிகள்
சென்னையில் சூட்டிங் நடந்தபோதும் இதேபோன்ற பிரச்சினைகளை படக்குழு சந்தித்தது. இதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் இதே பிரச்சினைகளை படக்குழு சந்தித்து வருகிறது. இதனால் ரசிகர்களும் பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆக்ஷன் காட்சி வீடியோ லீக்
இந்நிலையில் தற்போது விசாகப்பட்டின துறைமுகத்தில் ஆக்ஷன் காட்சிகள் நடத்தப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. இதில் ஹார்பர் ஊழியர்களுடன் விஜய் சண்டையிடும் காட்சி காணப்படுகிறது. விஜய்யை அதிகமான ஊழியர்கள் சுற்றி வளைத்து இந்தக் காட்சியில் சண்டையிடுகின்றனர். அவர்களை எல்லாம் ஒற்றை ஆளாக சமாளிக்கிறார் விஜய்.
Recommended Video

படக்குழுவினர் அதிர்ச்சி
ஒரு பெரிய ஹீரோவின் படத்திற்கே இந்த நிலை காணப்படுகிறது. விஜய் படம் என்றாலே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆர்வம் இருக்கும். அடுத்தடுத்த அப்டேட்களுக்காகவும் அவர்கள் காத்திருப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் அடிக்கடி இதுபோன்ற புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகிவருவது படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











