Don't Miss!
- Finance
கோபர்தன் திட்டம் ஏன் முக்கியம்.. விவசாயம், கிரமங்களுக்கு
- News
எகிறும் பிரஷர்.. பாஜகவால் ஈரோடு கிழக்கு தேர்தலில் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணியில் குழப்பம்.. அடுத்து என்ன?
- Lifestyle
உங்களுக்கு 'அந்த' இடத்தில் இரத்தம் வந்தால்... இந்த ஆபத்தான நோய் இருக்கலாமாம்... உடனே டாக்டரை பாருங்க!
- Automobiles
முன்ன மாதிரியில்ல ஹோண்டா வாகனங்கள் மீது நம்பிக்கை இழக்கும் மக்கள்... கிடுகிடுவென சரியும் விற்பனை!
- Sports
ஹர்திக் கொடுத்த பலே ஐடியா.. சதத்திற்கு நீங்க தான் காரணம்.. ஹர்திக் குறித்து சுப்மன் கில் பேச்சு
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சிறப்பான கதை இருந்தா சொல்லுங்க.. ரஜினி, கமலோட சேர்ந்து படம் பண்ணலாம்.. தில் ராஜு பளீச்!
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் இன்னும் இரு தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள படம் வாரிசு.
இந்தப் படத்தை பிரபல தெலுங்குப்பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த படங்களை தயாரிக்க தில் ராஜு திட்டமிட்டுள்ளார்.
வாரிசு ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்... படக்குழு அதிரடி அறிவிப்பு... விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய்யின் வாரிசு படம்
நடிகர் விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீசாக உள்ள படம் வாரிசு. தெலுங்கில் வாரிசுடு என்ற பெயரில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது. பேமிலி சென்டிமெண்டை மையமாக வைத்து உருவாகியுள்ள வாரிசு படத்தின் பாடல்கள், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கலர்ந்துள்ளது. ஆனால் படத்தின் ட்ரெயிலர் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.

தயாரிப்பாளர் தில் ராஜூ
வாரிசு படம் பொங்கலையொட்டி வரும் 11ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், வாரிசுடு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ தகவல் தெரிவித்துள்ளார். தெலுங்கிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், இந்தத் தகவல் தெலுங்குப்பட ரசிகர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது.

வாரிசு பிரமோஷனில் தில் ராஜூ
படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த தில் ராஜூ, தொடர்ந்து படத்தின் பிரமோஷனையொட்டி பேட்டிகளையும் கொடுத்து வருகிறார். தெலுங்குப்பட பிரமோஷனையொட்டி விஜய் ஆந்திர ரசிகர்களை சந்திப்பாரா என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, 14ம் தேதிக்குள் விஜய் ஆந்திர ரசிகர்களை சந்திக்க ஏற்பாடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகர்களுடன் இணைய தில் ராஜூ விருப்பம்
வாரிசு படத்தின்மூலம் கோலிவுட்டில் கால் பதித்துள்ள தில் ராஜூ தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த படங்களை தயாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் தமிழில் சிறப்பான கதைகளை தேடி வருவதாகவும் அப்படி சிறப்பான கதை அமையும் பட்சத்தில் அஜித்குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ் மற்றும் சூர்யா ஆகியோருடன் இணைந்து படம் தயாரிக்க தான் விரும்புவதாகவும் தில் ராஜூ தெரிவித்துள்ளார்.

போனி கபூருடன் பேசிய தில் ராஜூ
துணிவு பட தயாரிப்பாளர் போனிகபூருடன் பேசிய பின்பே வாரிசு மற்றும் துணிவு படங்களை ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யும் முடிவை எடுத்ததாகவும் அவர் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் சிரஞ்சீவி உள்ளிட்டவர்களின் படங்கள் வெளியீட்டை தொடர்ந்தே வாரிசுடு படத்தின் ரிலீஸ் 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அழ வைத்த விஜய்
தமிழில் ஏற்கனவே சிறப்பான நடிகராக உள்ள விஜய், வாரிசு படத்தின் கேரக்டராகவே மாறி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும், அவர் இந்தப் படத்தில் தன்னை சிரிக்க வைத்துள்ளதாகவும் அழ வைத்துள்ளதாகவும் தில் ராஜூ தெரிவித்துள்ளார். படத்தில் ஹீரோயிசத்தை விஜய் காட்டியுள்ளதாகவும் படத்தில் அனைத்து அம்சங்களும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.