தளபதி 67 அறிவிப்பிற்கு வாழ்த்து சொன்ன வாரிசு பட தயாரிப்பாளர்.. என்ன சொன்னார் தெரியுமா?
ஐதராபாத் : நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தின் அறிவிப்பிற்காக காத்திருந்தது போல பிரபலங்கள், ரசிகர்கள் அல்லோல கல்லோல படுத்தி வருகின்றனர்.
ஒருபுறம் பிரபலங்களின் வாழ்த்துமழையிலும் மற்றொருபுறம் ரசிகர்களின் உற்சாகத்திலும் நீந்தி வருகிறார் விஜய்.
இந்தப் படத்திற்கு வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவும் படத்தின் அறிவிப்பு வந்தவுடனேயே தன்னுடைய வாழ்த்தை உடனடியாக பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஜய்யின் வாரிசு படம்
நடிகர் விஜய்யின் வாரிசு படம் ஒருபுறம் ரசிகர்களின் பேராதரவுடன் வசூல்மழையில் அவரை நனைத்து வருகிறது. சர்வதேச அளவில் ரிலீசான இந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதன் வசூல் 300 கோடி ரூபாயை எட்டவுள்ளது. ராஷ்மிகா, பிரபு, சரத்குமார், ஷாம் உள்ளிட்டவர்களுடன் இந்தப் படத்தில் குடும்ப சென்டிமெண்ட் கதைக்களத்தில் விஜய் நடித்திருந்தார்.

தளபதி 67 பட அறிவிப்பு
இந்நிலையில் இந்தப்படத்தின் கொண்டாட்டத்தின் இடையிலேயே விஜய் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த தளபதி 67 படத்தின் கொண்டாட்டமும் சேர்ந்துக் கொண்டுள்ளது. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்றைய தினம் தயாரிப்பாளர் லலித்குமார் மற்றும் இயக்குநர் லோகேஷ் வெளியிட்டுள்ளனர்.

100% லோகேஷ் படம்
இந்நிலையில் இந்தப் படத்தின் அறிவிப்பு ரசிகர்களை மட்டுமின்றி பிரபலங்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது. விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இணைந்துள்ள நிலையில், இந்தப் படம் 100 சதவிகிதம் லோகேஷ் படமாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் தில் ராஜு வாழ்த்து
இந்நிலையில் இந்தப் படத்திற்கு வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ஒன் ஒன் ஒன் நம்பர் ஒன் என்று அவர் விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார். லவ் எமோஜியையும் பகிர்ந்துள்ளார். படக்குழுவினரின் பெயர்களை தனித்தனியாக டேக் செய்து அவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

உற்சாகத்தில் தயாரிப்பாளர்
தமிழில் வாரிசு படம் மூலம் களமிறங்கியுள்ள தில் ராஜுவிற்கு அந்தப் படம் மிகவும் சிறப்பாகவே கைக்கொடுத்துள்ளது. இந்தப் படத்தின் தொடர் வசூல் மற்றும் மற்ற உரிமைகள் விற்பனை உள்ளிட்டவை அவருக்கு மிகப்பெரிய அளவில் லாபத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











