அகண்டா பாலகிருஷ்ணாவே நீங்க தான்.. வாரிசு ‘ரஞ்சிதமே’ வெளியானதும் தெறிக்கும் தமன் மீம்ஸ்!
சென்னை: பாய்ஸ் படத்தில் பிட்டு பட புத்தகங்களை படிக்கும் ஆன்ட்டி வெறியனாக இருந்த தமனா இப்படி இசை சூறாவளியாக ஒவ்வொரு படங்களுக்கும் அனல் தெறிக்கும் பிஜிஎம்களையும் ஆடவைக்கும் பாடல்களையும் கொடுத்து வருகிறார் என ரசிகர்கள் வியந்து பார்த்து வருகின்றனர்.
தமன் இசையில் விஜய் வாய்ஸில் வெளியாகி உள்ள ரஞ்சிதமே பாடல் வெளியானதும் தமனை ரசிகர்கள் மீம் போட்டு கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
இனிமேல், சோஷியல் மீடியாவே ஃபயர் ஆகப் போகுது என ஏகப்பட்ட போட்டோ மீம்களை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

தமன் தாண்டவம்
வாரிசு படத்தின் முதல் சிங்கிளான ரஞ்சிதமே பாடல் அறிவித்ததை போலவே ஷார்ப்பாக நவம்பர் 5ம் தேதி மாலை 5.30 மணிக்கு வெளியானது. அரை மணி நேரத்திலேயே 1 மில்லியனுக்கும் அதிகமான வியூஸும் 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளும் குவிந்துள்ளன. விஜய்க்கு இப்படியொரு தரமான குத்து பாடலை கொடுத்து மாஸ் காட்டிட்டீங்க தமன் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வேறலெவல் விஜய்
ரஞ்சிதமே பாடலில் விஜய்யின் அழகையும் இளமை மாறாத தோற்றத்தை பார்க்கவே ரசிகர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும், இந்த வயதிலும் என்னவொரு எனர்ஜி என விஜய் ரசிகர்கள் வாய் பிளந்து ராஷ்மிகாவுக்கு பதிலாக விஜய்யை சைட் அடித்து வருகின்றனர்.

தமன் மீம்ஸ்
தமன் சும்மா சோஷியல் மீடியாவையே பிளாஸ்ட் பண்ணி பட்டையை கிளப்பி விட்டார் என்றும் நெஜமாவே இப்படியொரு வைப் செய்யக் கூடிய பாடலை தமன் கொடுப்பார் என சற்றும் நினைக்கவில்லை. தாறுமாறு தலைவா என பில்டிங் வெடிக்கும் போட்டோ மீமை எல்லாம் போட்டு வருகின்றனர்.

தமனுக்கு உம்மா
சூரி முகத்துக்கு பதிலாக தமன் முகத்தை மாற்றி வைத்து ரசிகர்கள் அவருக்கு உம்மா கொடுப்பது போன்ற போட்டோ மீம் எல்லாம் ரகளையின் உச்சக் கட்டம். விவேக் வரிகளில் மானஸி உடன் இணைந்து விஜய் பாடியுள்ள இந்த பாடலுக்கு அரபிக் குத்து பாடலுக்கும் சேர்த்து வச்சு கொரியோகிராஃபி செய்துள்ளார் ஜானி மாஸ்டர்.

அகண்டா பாலகிருஷ்ணாவே
எல்லாத்துக்கும் மேல், அகண்டா பாலகிருஷ்ணாவே நீங்க தான் என பாலகிருஷ்ணா பாடியில் தமனின் முகத்தை ஒட்ட வைத்து ரசிகர்கள் போட்டுள்ள போட்டோ மீம் குபீரென சிரிக்க வைத்து விடுகிறது. வாரிசு ரஞ்சிதமே பாடல் ஒரு பக்கம் டிரெண்டாகி வர மறுபக்கம் தமனின் மீம்களும் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











