Don't Miss!
- Education
NAAN MUDHALVAN SHORT FILM FESTIVAL 2023:குறும்பட திருவிழா போட்டியில் முதல் பரிசு ரூ.50 ஆயிரம்...!
- News
தூய்மை பணியாளர்களுக்கு விருந்து! எல்லோருக்கும் பிரியாணி பரிமாறிவிட்டு ரசம் ஊற்றி சாப்பிட்ட ஆ.ராசா!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி திருமணத்திற்கு முன் இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க... இல்லனா பிரச்சினைதான்!
- Finance
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா..நிபுணர்களின் கணிப்பு?
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
- Technology
Jio-விற்கு செக்மேட்.. பிரபலமான 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மையை சேர்த்த Airtel.. அதென்ன திட்டங்கள்?
- Automobiles
புதுசு கண்ணா புதுசு! டியோவின் இடத்தை காலி பண்ண வருகிறது ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்... பெயரே வேற லெவல்ல இருக்கு!
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
ஆட்டநாயகன் விஜய்.. 7 நாட்களில் 210 கோடி ரூபாய்.. வாரிசு அதிகாரப்பூர்வ வசூல்.. ரசிகர்கள் செம ஹாப்பி!
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் ஜனவரி 11ம் தேதி வெளியான வாரிசு திரைப்படம் 7 நாட்களில் 210 கோடி ரூபாய் உலகளவில் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீவெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்த வாரிசு படத்தை தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிப்பள்ளி இயக்கினார்.
நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷாம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயசுதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது.
ஷூட்டிங்கில் விஜய் ஆண்டனிக்கு முகத்தில் காயம்.. பற்கள் உடைந்தன.. ஆபத்தான கட்டத்தை கடந்தார்!

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் விஜய்யின் முந்தைய படங்களின் வசூல் எல்லாம் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. விஜய்யின் பிசினஸ் வெறும் 187 கோடி ரூபாய் மட்டுமே என சொல்லப்பட்டு வந்த நிலையில், வாரிசு படத்தின் வசூலை தயாரிப்பாளர் தில் ராஜு செம தில்லாக தற்போது அறிவித்து விஜய் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளார்.

210 கோடி
வாரிசு திரைப்படம் ஜனவரி 7ம் தேதி வெளியான நிலையில், பொங்கல் விடுமுறையை டார்கெட் செய்து 7 நாட்களும் வெளியிட்ட திரையரங்குகளில் எல்லாம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகவும், எக்ஸ்ட்ரா காட்சிகள் அதிகரிக்கப்பட்டும் குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து வந்து பார்த்ததில் வெறும் 7 நாட்களில் வாரிசு திரைப்படம் அதிகபட்சமாக உலகளவில் 210 கோடி ரூபாய் வசூலை அள்ளி உள்ளதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நெகட்டிவ் விமர்சனங்கள்
வாரிசு திரைப்படம் சீரியல் போல உள்ளதாக ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்தனர். அஜித் ரசிகர்கள் வாரிசு படத்தை ட்ரோல் செய்து ஏகப்பட்ட மீம்களை வெளியிட்டனர். அத்தனை தடைகளையும் தாண்டி விஜய் எனும் ஒன் மேன் ஆர்மிக்காக அவரது ரசிகர்கள் இந்த படத்தை பெரிய வெற்றியடைய செய்துள்ளனர் என இண்டஸ்ட்ரியில் பெரிய பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

துணிவு வசூல் வருமா
அஜித்தின் துணிவு திரைப்படம் விஜய்யின் வாரிசு படத்துடன் நேருக்கு நேர் மோதிய நிலையில், யார் வசூல் மன்னன் என்பதை பார்த்து விடலாம் என இரு நடிகர்களும் இந்த முறை முடிவு பண்ணி மோதினர். வாரிசு படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் வெளியாகுமா என கேள்விகள் கிளம்பி உள்ளன. இந்த பொங்கல் விடுமுறைக்கு அஜித்தின் துணிவு திரைப்படமும் திரையிட்ட திரையரங்குகள் முழுவதும் நன்றாகவே ஓடி வருவதாக கூறப்பட்ட நிலையில், விரைவில் போனி கபூர் அதிகாரப்பூர்வ வசூலை சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

300 கோடி
வாரிசு திரைப்படம் ஃபேமிலி எண்டர்டெயின்மென்ட் படமாக இந்த பொங்கலுக்கு வெளியாகி உள்ள நிலையில், இதுவரை 7 நாட்களில் 210 கோடி ரூபாய் வசூலை அள்ளி உள்ளது. புதன் மற்றும் வியாழக்கிழமை சற்று சரிவை சந்தித்தாலும் மீண்டும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பெரிய நடிகர்கள் படங்கள் ஏதும் வராத நிலையில், குடியரசு தின விடுமுறை உள்ளிட்டவை உள்ள நிலையில், அடுத்து 300 கோடி வசூலை வாரிசு நெருங்கும் என சினிமா டிராக்கர்கள் தெரிவித்துள்ளனர்.