மேடையில் வைத்தே விஜய்யை கலாய்த்த தில் ராஜூ... வாரிசு பட தயாரிப்பாளரே இப்படி செய்யலாமா...?
சென்னை: விஜய் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான வாரிசு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கும் மேல் வசூலித்தது.
தில் ராஜூ தயாரிப்பில் வம்ஷி பைடிப்பள்ளி இயக்கிருந்த இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகியிருந்தது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தில் ராஜூ, விஜய்யை புகழ்ந்து பேசியிருந்தார்.
இந்நிலையில், தற்போது தெலுங்கில் பாகலம் படத்தை தயாரித்துள்ள தில் ராஜூ, அதன் இசை வெளியீட்டு விழா மேடையில் விஜய்யை கலாய்த்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வாரிசு ப்ரோமோஷன்
விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி சூப்பர் ஹிட்டானது. எப்போதும் கோலிவுட் இயக்குநர்களுடன் பணியாற்றும் விஜய், வாரிசு படத்தில் தெலுங்கு இயக்குநர் வம்ஷி பைடிப்பள்ளியுடன் இணைந்தார். மேலும், தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பேனரில் நடித்திருந்தார் விஜய். முன்னதாக வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விஜய்யை புகழ்ந்த தில் ராஜூ
ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்ட வாரிசு இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தில் ராஜூவும் பங்கேற்று மேடையில் பேசியிருந்தார். அப்போது அவர் வாரிசு படத்தில் "டான்ஸ் வேணுமா... டான்ஸ் இருக்கு, பைட் வேணுமா... பைட் இருக்கு, விஜய் சார் பாடிலேங்குவேஜ் வேணுமா... அதுவும் இருக்கு.." என ரைம்மிங்காக பேசி விஜய் ரசிகர்களுக்கு வைப் கொடுத்திருந்தார். இந்த வீடியோ வைரலானதோடு, பலவிதமான மீம்ஸ்களுக்கும் கண்டெண்ட் கொடுத்தது.

விஜய்யை டேமேஜ் செய்த தருணம்
இந்நிலையில், வாரிசு திரைப்படம் தியேட்டர்களில் 50 நாட்களை கடந்ததோடு, அமேசானில் வெளியாகி ஓடிடி ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், இதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் விஜய்யை மேடையில் வைத்தே கலாய்த்துள்ளார் தில் ராஜூ. தெலுங்கில் அவர் தயாரித்துள்ள பாகலம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய தில் ராஜூ, விஜய்யின் பாடி லேங்குவேஜ் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

விஜய் சார் பாடிலேங்குவேஜ் இல்லை
அதாவது பாகலம் திரைப்படம் குறித்து பேசிய தில் ராஜூ, "இந்த சினிமாவில் பைட் இல்லை, டான்ஸ் இல்லை, விஜய் சாரின் பாடி லாங்குவேஜ் இல்லை. ஆனால் சினிமாவில் சூப்பர் எண்டர்டெயின்மெண்ட் இருக்கு, சூப்பர் எமோஷன் இருக்கு சூப்பரான தெலுங்கானா நேட்டிவிட்டி இருக்கு என பேசியுள்ளார். வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய்யை புகழ்ந்ததை, அப்படியே உல்டாவாக மாற்றி பேசியது வைரலாகி வருகிறது. தில் ராஜூவின் இந்த பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ட்ரெண்டான தில் ராஜூ வீடியோ
விஜய்யை தில் ராஜூ கலாய்த்து பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. முன்னதாக வாரிசு படத்தில் இருந்து செம்ம மாஸ்ஸான டெலிட்டட் சீன் நேற்று வெளியாகியிருந்தது. பிரகாஷ்ராஜுக்கு விஜய் சவால் விடும் அந்த காட்சி ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தது. அதனைத் தொடர்ந்து இப்போது தில் ராஜூவின் பேச்சு தொடர்ந்து ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











