துணிவை விடாமல் துரத்தும் வாரிசு.. ஒரே நாளில் ரிலீஸ்.. பொங்கலுக்கு பெரிய சம்பவம் இருக்கு போல!

சென்னை: சங்கீத சுவரங்கள் என சந்தானம் படத்தின் காமெடியையும் கல்லூரி படத்தில் வரும் நீங்க சொல்லுங்க.. ஏன் நீங்க சொல்லுங்க காமெடியையும் போட்டு வாரிசு மற்றும் துணிவு படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்து வந்ததை ஏகப்பட்ட மீம்கள் போட்டு ட்ரோல் செய்தனர்.

வாரிசு ட்ரெய்லர் வெளியான உடனே அதற்கு போட்டியாக உடனடியாக போனி கபூர் துணிவு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தார்.

இந்நிலையில், துணிவு படத்தை விடாமல் துரத்தும் கருப்பாக வாரிசு படமும் அதே தேதியில் வருகிறேன் என சவால் விட்டு ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

துணிவு ரிலீஸ் தேதி

துணிவு ரிலீஸ் தேதி

துணிவு ட்ரெய்லர் வெளியான போது ரிலீஸ் தேதியை போனி கபூர் அறிவிக்கவில்லை. வாரிசு படத்தின் ட்ரெய்லரிலாவது ரிலீஸ் தேதி வரும் என வெயிட் பண்ணிக் கொண்டு இருந்த நிலையில், நீங்க முதல்ல சொல்லுங்க என வாரிசு படக்குழுவும் ரிலீஸ் தேதியை அறிவிக்காத நிலையில், ஜனவரி 11ம் தேதி துணிவு ரிலீஸ் என வாரிசு ட்ரெய்லர் வந்த உடனே போனி கபூர் ட்வீட் போட்டு விட்டார்.

வாரிசு ரிலீஸ் தேதி

வாரிசு ரிலீஸ் தேதி

வாரிசு ட்ரெய்லரில் ரிலீஸ் தேதியை அறிவிக்காத தயாரிப்பாளர் தில் ராஜு துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ட்வீட் போட்ட நிலையில், ஜனவரி 12ம் தேதி வந்தால் சரியாக இருக்காது என பேச்சுவார்த்தைகள் எல்லாம் நடத்தி நாங்களும் ஜனவரி 11ம் தேதிக்கே வருகிறோம் என்கிற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சபாஷ் சரியான போட்டி

சபாஷ் சரியான போட்டி

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு படம் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என அறிவித்த நிலையில், நடிகர் விஜய்யின் வாரிசு படமும் வரும் ஜனவரி 11ம் தேதியே வெளியாகும் என்கிற அறிவிப்பை தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்துள்ளார். வரும் ஜனவரி 11 முதல் 17 வரை திரையரங்குகள் நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை சரியான பொங்கல் போட்டி தமிழ் சினிமாவில் காத்துக் கொண்டிருக்கிறது.

சரி சமமான தியேட்டர்கள்

சரி சமமான தியேட்டர்கள்

தமிழ்நாட்டில் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு என இரு படங்களுக்குமே சரி சமமாக தலா 450க்கும் அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நாளில் மோத உள்ள நிலையில், இரண்டு படங்களின் முதல் நாள் வசூல் எப்படி இருக்கும் என்பதும் ஒரு படம் சொதப்பினாலும், அடுத்த நாளில் இருந்து மற்றொரு படத்துக்கு தியேட்டர்கள் செல்லும் நிலைமையும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களுக்கு கொண்டாட்டம்

ரசிகர்களுக்கு கொண்டாட்டம்

அஜித் தனது ரசிகர்களுக்காக நெகட்டிவ் ஷேடில் அதிரடியாக மாறி ஆட்டம் பாட்டத்துடன் வங்கியில் கொள்ளை அடிக்கப் போவது நிச்சயம் ரசிகர்களை கொண்டாட்ட மோடுக்கு கொண்டு செல்லும். அதே போல நடிகர் விஜய் நீண்ட நாள் கழித்து பக்காவான ஃபேமிலி எண்டர்டெயின்மென்ட் படத்தை கொடுத்து தனது ரசிகர்களை இந்த பொங்கலுக்கு குடும்பத்துடன் வந்து பார்க்க செய்யப் போகிறார். இரு படங்களும் சுமாராக இருந்தால் கூட ஆளுக்கு 200 கோடி வசூல் செய்தால் தியேட்டருக்கு இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே மிகப்பெரிய வசூல் வேட்டை கன்ஃபார்ம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X