தீ தளபதி.. பெயரை கேட்டாலே சும்மா அதிருதே.. வாரிசு செகண்ட் சிங்கிள் எப்போ ரிலீஸ் தெரியுமா?
சென்னை: இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அறிவிப்பு வெளியானது.
இன்று மாலை நிச்சயம் தளபதி விஜய்யின் வாரிசு படத்தின் ஹாட் அப்டேட் வரும் என எதிர்பார்த்து காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு வாரிசு தயாரிப்பு நிறுவனம் ஏமாற்றத்தை அளிக்காமல் அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரஞ்சிதமே பாடல் 75 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ் கடந்துள்ள நிலையில், அடுத்த பாடலாக தீ தளபதி பாடல் வெளியாகிறது.

ஆக்ஷனும் இருக்கு
அஜித்தின் துணிவு தான் ஆக்ஷன் படம் என்றும் விஜய்யின் வாரிசு படம் குடும்பங்கள் கொண்டாடும் படம் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில், அதிரடியான ஆக்ஷன் காட்சிகளை வாரிசு படக்குழு இறுதிக்கட்டத்தில் படமாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் எப்போதுமே பக்கா பேக்கேஜாகத் தான் தனது படத்தை கொடுப்பார் என்கிற நிலையில், வாரிசு படத்திலும் ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ், டான்ஸ் என அனைத்துமே குறைவில்லாமல் இருக்கும் என்பது உறுதியாகி விட்டது.

ரஞ்சிதமே ரணகள ஹிட்
தமன் இசையில் வெளியான ரஞ்சிதமே பாடலை நடிகர் விஜய் பாடியிருந்தார். அந்த பாடல் வெளியானதில் இருந்தே ஏகப்பட்ட ரீல்ஸ் போடப்பட்டு சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இது வரை 75 மில்லியன் வியூஸ் கடந்து டிரெண்டாகி வரும் இந்த பாடல் வாரிசு படம் வெளியாவதற்கு முன்பாக 100 மில்லியனை தாண்டுமா என்கிற எதிர்பார்ப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது.

தீ தளபதி
ரஞ்சிதமே தெலுங்கு பாடல் சமீபத்தில் வெளியானது. ஆனால், தமிழ் பாடல் அளவுக்கு இல்லை என ட்ரோல் செய்யப்பட்டது. இந்நிலையில், அதிரடியாக வரும் டிசம்பர் 4ம் தேதி மாலை 4 மணிக்கு 'தீ தளபதி' பாடல் வெளியாகிறது என்கிற அறிவிப்பை வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

வாரிசு டிரைலர்
நியூ இயர் கொண்டாட்டமாக வரும் ஜனவரி 1ம் தேதி வாரிசு படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. டிசம்பர் 24ம் தேதி நடைபெற உள்ள ஆடியோ லாஞ்சிலேயே படத்தின் டிரைலரையும் வெளியிட்டு விடலாமே என விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications