Varisu: வாரிசு VS விஸ்வாசம்... TRP கிங் யாரு... அடித்துக் காட்டிய விஜய் - அஜித் ரசிகர்கள்

சென்னை: விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 11ம் தேதி வெளியானது.

வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

திரையரங்குகளைத் தொடர்ந்து அமேசானில் வெளியான வாரிசு, கடந்த 14ம் தேதி சன் டிவியிலும் ஒளிப்பரப்பானது.

இதனையடுத்து தற்போது வாரிசு படத்தின் டிஆர்பி ரேட்டிங் வெளியாகி டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

 Varisu: Vijay-Ajith fans clash over Varisu-Viswasam films over TRP lead

வாரிசு VS விஸ்வாசம் TRP:விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்கள் பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியானது. பல வருடங்களுக்குப் பிறகு விஜய் - அஜித் படங்கள் ஒரே தேதியில் வெளியானதால், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியது.

இதனைத் தொடர்ந்து வாரிசு அமேசான் ப்ரைமிலும், துணிவு நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. வாரிசு, துணிவு இரண்டுமே ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கடந்த 14ம் தேதி வாரிசு திரைப்படம் சன் டிவியில் ஒளிப்பரப்பானது. திரையரங்குகள், ஓடிடியில் வாரிசு படத்தை மிஸ் செய்த ரசிகர்கள் சன் டிவியில் பார்த்து ரசித்தனர்.

 Varisu: Vijay-Ajith fans clash over Varisu-Viswasam films over TRP lead

இதனையடுத்து வாரிசு படத்தின் டிஆர்பி ரேட்டிங் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வாரிசு திரைப்படம் டிஆர்பியில் 19.60 புள்ளிகள் பெற்றுள்ளது. மேலும், 15.9 புள்ளி இம்ப்ரஸ்கள் கிடைத்துள்ளது இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இன்னொரு பக்கம் அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் 2019ம் ஆண்டு வெளியானது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்த இந்தப் படம் மெகா ஹிட் அடித்தது. பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய விஸ்வாசம், சன் டிவியில் ஒளிப்பரப்பான போதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் டிஆர்பி 23.5 என அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், 18.14 இம்ப்ரஸன் பெற்றுள்ளதாகவும் வாரிசு படத்தை விஸ்வாசம் தான் டாப் என்றும் டிவிட் செய்து வருகின்றனர்.

 Varisu: Vijay-Ajith fans clash over Varisu-Viswasam films over TRP lead

முக்கியமாக அஜித்தின் விஸ்வாசம் படம் சன் டிவியில் ஒளிப்பரப்பான போது, ஐபிஎல்-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் மேட்ச் லைவ் சென்று கொண்டிருந்த புள்ளி விவரத்தையும் அஜித் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், விஜய்யின் வாரிசு தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் டெலிகாஸ்ட் செய்தும் 19.6 டிஆர்பி பெற்றுள்ளது என ட்ரோல் செய்து வருகின்றனர். அதேநேரம் விஜய் ரசிகர்கள் விஸ்வாசம் படம் 18.14 டிஆர்பி தான் பெற்றுள்ளதாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X