Varisu On Sun TV: இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக... விஜய்யின் வாரிசுக்கு வந்த சோதனை!
சென்னை: தளபதி விஜய் தற்போது லோகேஷ் இயக்கும் லியோ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
முன்னதாக விஜய் நடித்த வாரிசு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 11ம் தேதி வெளியானது.
பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கும் மேல் வசூலித்த வாரிசு, அமேசான் ப்ரைமிலும் ஓடிடி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், தற்போது தொலைக்காட்சியிலும் வாரிசு படம் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக
கோலிவுட்டின் வசூல் மாஸ்டர், ரசிகர்களின் தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. முன்னதாக விஜய் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக வாரிசு திரைப்படம் வெளியாகியிருந்தது.
கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி வெளியான வாரிசு, பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியது. அதேநேரம், விஜய்யின் நண்பர் அஜித்தின் துணிவு திரைப்படமும் ஜனவரி 11ம் தேதி வெளியாகி 300 கோடி கலெக்ஷன் செய்தது. அதேபோல், விஜய்யின் வாரிசு அமேசான் ப்ரைம் தளத்திலும், அஜித்தின் துணிவு நெட்பிளிக்ஸிலும் ஸ்ட்ரீமிங் ஆனது. இந்த இரண்டு படங்களுக்குமே ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது விஜய்யின் வாரிசு திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. வரும் 14ம் தேதி சன் டிவி தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. சன் டிவியின் 30வது ஆண்டை கொண்டாடும் விதமாக வாரிசு திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள சன் டிவி, "இந்திய தொலைக் காட்சிகளில் முதன் முறையாக புத்தம் புதிய மெகாஹிட் திரைப்படம் "வாரிசு"!" என குறிப்பிட்டுள்ளது.

திரையரங்குகளிலும் ஓடிடியிலும் பார்க்க முடியாத ரசிகர்கள், வாரிசு படத்தை சன் டிவியில் பார்க்க ரெடியாகிவிட்டனர். ப்ரைம் டைம் ஆன மாலை 6.30 மணிக்கு வாரிசு திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளதால், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவெளிவிட்டு பேமிலி செண்டிமென்ட் ஜானரில் விஜய் நடித்துள்ள வாரிசு, சன் டிவி நேயர்களுக்கு கொண்டாட்டமாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.


Click it and Unblock the Notifications











