Don't Miss!
- News
2022ம் ஆண்டில் பதிவான அதிக அளவிலான மரண தண்டனை.. 20 ஆண்டுகளில் இல்லாத அளவு! ஷாக் ரிப்போர்ட்
- Sports
இதெல்லாம் ஒரு பிட்ச்-ஆ? பிசிசிஐ மீது பாய்ந்த ஹர்திக் பாண்ட்யா.. 2வது டி20 வெற்றி குறித்து அதிருப்தி
- Automobiles
டொயோட்டா காரை அப்படியே காப்பி அடித்து புதிய காரை உருவாக்கும் மாருதி! பெரிய குடும்பங்களுக்காக சூப்பர் முயற்சி!
- Lifestyle
Today Rasi Palan 30 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது...
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
Varisu vs Thunivu Memes: ரெண்டுல எது ரொம்ப மொக்கை.. இப்போ போட்டியே அதுதான்.. ரசிகர்கள் பரிதாபங்கள்!
சென்னை: கடந்த ஆண்டு பீஸ்ட் மற்றும் வலிமை படங்களை கொடுத்த பின்னரும் அடுத்த படத்தில் விஜய் மற்றும் அஜித் ஏமாற்ற மாட்டார்கள் என நினைத்து முதல் நாள் 3 ஆயிரம் ஆனால் கூட பரவாயில்லை என முதல் ஷோவே பார்க்க வேண்டும் என நினைத்த ரசிகர்களுக்கு இருவரும் நல்லா வச்சு செய்து விட்டனர் என நெட்டிசன்கள் பதிவிட்டுள்ள ட்ரோல் மீம்கள் டிரெண்டாகி வருகின்றன.
லவ் டுடே போன்ற வெறும் 5 கோடி ரூபாயில் எடுக்கப்படும் படங்களே ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், விஜய் மற்றும் அஜித் படங்கள் 100 முதல் 200 கோடி ரூபாய் வரை பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டும் ரசிகர்களை என்டர்டெயின் செய்ய முடியாமல் சொதப்புவது ஏன் என்கிற கேள்வி தான் எழுந்துள்ளது.
அஜித் ரசிகர் பரத்குமாரின் உயிரே FDFS கொண்டாட்ட மிகுதியில் போய் விட்டதே, இனிமேலாவது திருந்துவார்களா? என்று பார்த்தால் லோகேஷ் கனகராஜிடமும் விக்னேஷ் சிவனிடமும் அப்டேட் கேட்க ஆரம்பித்து விட்டனர் என ரசிகர்கள் பரிதாபங்கள் மீம்ஸ் டிரெண்டாகி வருகின்றன.
வலிமை
தோல்விக்கு
அப்டேட்
கொடுத்தது
தான்
காரணம்..
துணிவு
கதை
ட்ரெய்லரிலேயே
இருக்கு
-
ஹெச்.
வினோத்!

விஜய்சேதுபதி சொன்னது தான்
சோஷியல் மீடியா உங்கள் நேரத்தை அதிகம் எடுத்துக் கொண்டு அவன் காசு சம்பாதிக்கிறான். இளைஞர்கள் நீங்கள் புரிந்து கொள்ள மாட்டேங்கிறீங்க என சமீபத்தில் நடிகர் விஜய்சேதுபதி சொன்ன விஷயம் இந்த சினிமா FDFS ஸ்கேமுக்கும் பொருந்தும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மற்ற நடிகர்கள் படங்கள் நல்லா இருந்தும் தியேட்டர்கள் காலியாகத்தான் இருக்கு பொறுமையாக பார்த்துக் கொள்ளலாம். ஆனால், முன்னணி நடிகர்கள் படங்களை முதல் நாள் முதல் ஷோவே பார்க்க வேண்டும் என ட்யூன் பண்ணி இளைஞர்கள் மீது மிகப்பெரிய மோசடி நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

சிரிப்பா சிரிக்குது
இந்த பொங்கல் ரேஸ் எப்படி இருக்கப் போகுது என விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் கடந்த சில மாதங்களாக செய்து வந்த அலப்பறைக்கு எச். வினோத்தின் சிரிப்பு தான் பதில் என வெறும் போட்டோ மீமை போட்டே நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

யார் சதி பண்றா
இந்த படம் சாதனை படைக்கக் கூடாதுன்னு சதி நடக்குது.. யார் சதி பண்றா.. அவரோட போட்டியாளர்.. அது யாரு?.. அதுவும் அவர் தான் என நடிகர் விஜய்யின் வாரிசு ஆடியோ லாஞ்ச் பேச்சை ட்ரோல் செய்துள்ள மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

பைத்தியமா இருக்காதீங்க
ஃபேன்ஸா இருங்க தப்பில்லை.. ஆனால், பைத்தியமா இருக்காதீங்க என அஜித் ரசிகர் 19 வயது பரத்குமார் உயிரிழந்த சோக நிகழ்வை பதிவிட்டு ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ணும் இந்த மீமும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தோனியும் சச்சினையும் விடல
துணிவு படத்தில் சிஎஸ்கே அணியை பற்றிய விமர்சனத்துக்கு காரணம் தோனியை தல என கூறுவது பிடிக்காமல் வைக்கப்பட்ட ஒன்று என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும், மியூச்சல் ஃபண்டஸ் பற்றி பேசியிருக்கும் நிலையில், தோனி இவர் தான் இதிலும் எனக்கு குரு என சச்சினையையும் இழுத்து விடுவது போன்ற மீம்களும் வெளியாகி உள்ளன.

200 ரூபா போதும்
காசு இருந்தாலும் 1000 - 2000 கொடுத்து படத்தை பார்க்காதீங்க.. 200 ரூபாய், 150 ரூபாய் டிக்கெட்ல பாருங்க போதும் ஏனென்றால் ரசிகர்கள் எல்லாம் ஒரே ரகம் ஏழ்மை ரகம் என இந்த ரசிகர் அதிக விலைக்கு டிக்கெட் விற்று ஏமாற்றுபவர்களுக்கு எதிரான மீமை போட்டுள்ளார்.

யூடியூப் பேட்டிகளில் வினோத்
தனது துணிவு படத்தை தியேட்டரில் ஓட வைக்க யூடியூப் பேட்டிகளில் இயக்குநர் வினோத் இப்படித்தான் பேசி ஏமாற்றினார் என்றும் படத்தில் போய் பார்த்தால் செகண்ட் ஹாஃபில் அஜித் முதுகில் குத்தும் ஷாட்டை எல்லாம் வைத்து படத்தை படுக்க வைத்து விட்டார் என ட்ரோல் செய்து வருகின்றனர்.

ரெண்டுல எது ரொம்ப மொக்கை
படம் வெளியாவதற்கு முன்னதாக ட்ரெய்லர் வெளியான உடனே மெகா சீரியல் ட்ரோலும், பீஸ்ட் 2 ட்ரோலும் டிரெண்டானது. அப்பவே ஒரு நெட்டிசன் ரெண்டு படமும் மொக்கையா இருந்தா என்னடா பண்ணுவீங்க என கேட்க.. ஹரே சாப் அது எங்களுக்கே தெரியும்! ரெண்டுல எது ரொம்ப கேவலமா இருக்கப் போகுதுன்றது தான் இப்ப போட்டியே என பரிதாபங்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்தது போலவே இரு படங்களும் ஆகி விட்டதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

தளபதி 67 vs ஏகே 62
இதற்கு மேலாவது ரசிகர்கள் திருந்துவார்கள் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்றும் தளபதி 67 வெயிட்டா வரும் என விஜய் ரசிகர்களும் ஏகே 62 தரமா வரும் என அஜித் ரசிகர்களும் சொல்லி வருவது மட்டுமின்றி அடுத்த பட இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ் மற்றும் விக்னேஷ் சிவனை அப்டேட் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்து விட்டனர் என்றும் கலாய்த்து வருகின்றனர்.