Varisu box office worldwide: வசூலில் சதமடித்த விஜய்... ரசிகர்கள் கொடுத்த ஆட்ட நாயகன் விருது

சென்னை: விஜய்யின் வாரிசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

அஜித்தின் துணிவு திரைப்படமும் அதே 11ம் தேதி ரிலீஸானதால் இருதரப்பு ரசிகர்களும் கொண்டாட்ட மனநிலையில் இருந்தனர்.

தமிழில் வாரிசாக வெளியான இத்திரைப்படம், தெலுங்கில் வாரிசுடு என்ற டைட்டிலில் நேற்று ரிலீஸானது.
இந்நிலையில், வாரிசு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்து தகவல் கிடைத்துள்ளது.

 பொங்கல் வின்னர் வாரிசு

பொங்கல் வின்னர் வாரிசு

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வம்ஷி பைடிப்பள்ளி இயக்கிய இந்தப் படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். பல்வேறு தடைகளை கடந்து சொன்னபடி 11ம் தேதி ரிலீஸான வாரிசு படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. அதனால் முதல் நாளில் இருந்தே வாரிசு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து பாசிட்டிவான தகவல்கள் கிடைத்துள்ளன. இதனையடுத்து படக்குழு தரப்பில் இருந்து 'பொங்கல் வின்னர் வாரிசு' என்ற போஸ்டரும் வெளியாகி வைரலானது.

 வாரிசு பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

வாரிசு பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

பேமிலி சென்டிமெண்ட் ஜானரில் உருவாகியுள்ள வாரிசு படத்தில், விஜய்யுடன் ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே தமன் இசையில் வெளியான பாடல்களும் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது. இதனையடுத்து முதல் நாளில் தமிழ்நாட்டில் 20 முதல் 23 கோடி ரூபாய் வசூலித்துள்ளது வாரிசு. இந்தியா முழுவதும் 32 முதல் 34 கோடியும், உலகம் முழுக்க 44 முதல் 47 கோடி ரூபாய் வரையும் கலெக்‌ஷன் செய்துள்ளது.

 வசூலில் சதமடித்த விஜய்

வசூலில் சதமடித்த விஜய்

முதல் நாளைப் போலவே அடுத்தடுத்த நாட்களிலும் வரிசு படத்திற்கான டிக்கெட் புக்கிங் பிஸியாகவே இருந்தது. இரண்டாவது நாளில் தழிழ்நாட்டில் 12 முதல் 15 கோடியும், இந்தியாவில் 12 முதல் 14 கோடியும் வசூலித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் 21 கோடி ரூபாய் வசூலித்தது. இதனால் முதல் இரண்டு நாட்களில் வாரிசு வசூல் 65 முதல் 70 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் கிடைத்துள்ளது. அதேபோல் மூன்றாவது நாளில் தமிழ்நாட்டில் 9 முதல் 11 கோடியும், இந்தியாவில் 11 கோடியும். உலகம் முழுக்க மொத்தமாக ரூ.17 கோடி வரையும் கலெக்‌ஷன் செய்துள்ளது. இதனால் மூன்றாஹு நாளிலேயே 100 கோடி வசூலை நெருங்கியது வாரிசு.

 ரசிகர்களின் ஆட்ட நாயகன் விருது

ரசிகர்களின் ஆட்ட நாயகன் விருது

இந்நிலையில் பொங்கல் விடுமுறை தொடங்கியதால் நான்காவது நாளிலும் வாரிசு படத்தின் வசூல் மேலும் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியா முழுவதும் வாரிசு 4வது நாள் கலெக்‌ஷன் 24 முதல் 26 கோடி ரூபாய் இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது. அதன்படி மொத்தமாக இதுவரை ரூ.108 முதல் 110 கோடி வரை வாரிசு படத்துக்கு பாக்ஸ் ஆபிஸில் கலெக்‌ஷன் கிடைத்துள்ளது. 2023ல் முதல் 100 கோடி கிளப்பில் இணைந்த படமாக வாரிசு காணப்படுகிறது. அதேநேரம் தெலுங்கில் வெளியான வாரிசுடு திரைப்படமும் முதல் நாளில் 15 முதல் 20 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். அஜித்தின் துணிவு திரைப்படமும் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X