200 கோடி கூட தாண்டாத துணிவு? 300 கோடி வசூலை கொண்டாடும் வாரிசு.. தெறிக்கும் ஹாஷ்டேக் டிரெண்டிங்!
சென்னை: விஜய்யின் பிகில் படம் 300 கோடி வசூலை கடந்ததாக கூறப்பட்டாலும் அதிகாரப்பூர்வமாக ஏஜிஎஸ் நிறுவனம் அதனை அறிவிக்கவில்லை. ஆனால், முதன்முறையாக விஜய்யின் வாரிசு திரைப்படம் 300 கோடி வசூலை கடந்ததாக தில் ராஜு அறிவித்துள்ளார்.
இந்நிலையில், #VarisuHits300Crs ஹாஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் நேற்று முதலே டிரெண்ட் செய்து தெறிக்கவிட்டு வருகின்றனர்.
மேலும், போட்டியாக வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம் இதுவரை 200 கோடி வசூலை கூட நெருங்கவில்லை என விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

300 கோடி கிளப்பில் வாரிசு
வாரிசு திரைப்படத்தின் வசூல் விவரத்தை ஆரம்பத்தில் இருந்தே தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது. 4வது வார முடிவில் வாரிசு படம் 300 கோடி வசூல் வேட்டையை நடத்தி உள்ளதாக நேற்று மீண்டும் வசூல் விவரத்தை அறிவிக்க விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் குதித்து விட்டனர்.

தெறிக்கும் ஹாஷ்டேக் டிரெண்டிங்
#VarisuHits300Crs என்கிற ஹாஷ்டேக்கை போட்டு விஜய் ரசிகர்கள் தொடர்ந்து இன்றும் டிரெண்டிங்கை தெறிக்க விட்டு வருகின்றனர். மேலும், அஜித் ரசிகர்களை எந்தளவுக்கு சமூக வலைதளங்களில் ஓட்ட முடியுமோ அந்த அளவுக்கு கலாய்த்து வருகின்றனர். அட்லீ, ஏ.ஆர், முருகதாஸ், லோகேஷ் எல்லாம் தேவையில்லை. தளபதி விஜய் ஒருத்தர் போதும் என விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

200 கோடி கூட தொடல
வாரிசு திரைப்படம் தமிழ்நாட்டில் 140 கோடி, ஆந்திரா/தெலங்கானாவில் 28 கோடி, கர்நாடகாவில் 14.5 கோடி, கேரளாவில் 13 கோடி, மற்ற மாநிலங்களில் 16 கோடி, ஓவர்சீஸில் 88 கோடி என மொத்தம் 300 கோடி வசூலை 26 நாட்களில் கடந்துள்ளது என்றும் அஜித்தின் துணிவு படம் மொத்தமாக 184 கோடி தான் வசூல் செய்துள்ளது என விஜய் ரசிகர்கள் வசூல் கணிப்புகளை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

கலெக்ஷன் ரிப்போர்ட்டை தவிர
துணிவு படத்தின் கலெக்ஷன் ரிப்போர்ட் தெரிந்து கொள்ள ஆபிஸுக்கு அழைத்த ராகுல் 4வது வாரத்தில் வெற்றிகரமாக படம் ஓடுதுன்னு போட்ட ட்வீட்டை விஜய் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். கலெக்ஷன் ரிப்போர்ட்டை தவிர எல்லாத்தையும் சொல்றியே என வெறுப்பேற்றி வருகின்றனர்.

கிளாஷ் விட்டு
கிளாஷ் விட்டு எவனாது 300 கோடி கலெக்ட் பண்ணுவானா.. ஆனால், என் படம் பண்ணும் சார், அது தான் நம்ம ஸ்டைலு என 300 கோடி கிளப்பில் வாரிசு இணைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், ஏகப்பட்ட மீம்களும் அதிகளவில் பரவி அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றன.

தி பாஸ் ரிட்டர்ன்ஸ்
பிகில் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் 300 கோடி வசூல் வேட்டை ஆடியுள்ளது என்றும் தி பாஸ் ரிட்டர்ன்ஸ் என விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜய் தான் நம்பர் ஒன் என்றும் அஜித் போட்டிக்கு வந்து தனது வசூலை அதிகரித்துக் கொண்டார், அதுவும் நல்ல விஷயம் தான் என விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











