twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆதித்ய வர்மா ஆன வர்மா: இயக்குநர் யார் தெரியுமோ?

    By Siva
    |

    Recommended Video

    வர்மா படத்தின் பெயரை ஆதித்ய வர்மா என்று மாற்றியுள்ளனர்-வீடியோ

    சென்னை: வர்மா படத்தின் பெயரை ஆதித்ய வர்மா என்று மாற்றியுள்ளனர். படத்தை கிரிசய்யா இயக்குகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான வர்மா மீண்டும் முதலில் இருந்து எடுக்கப்படுகிறது. இம்முறை த்ருவ் விக்ரமுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிடா சந்து நடிக்கிறார்.

    Varmaa becomes Adhithya Varma

    மேலும் ப்ரியா ஆனந்த் அவராகவே நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. படத்திற்கு ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். 7ம் அறிவு படத்திற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து தமிழ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் அவர்.

    வர்மா படம் குறித்து இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்கள். அதன்படி அறிவிப்புடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. படத்தின் பெயரை ஆதித்ய வர்மா என்று மாற்றியுள்ளனர். போஸ்டரில் த்ருவின் லுக் முன்பை விட ஸ்டிராங்காக உள்ளது.

    படத்தை அர்ஜுன் ரெட்டியின் துணை இயக்குநர் கிரிசய்யா இயக்குகிறார், ராதன் இசையமைக்கிறார்.

    நான் சொல்லியும் கூட தமன்னா நம்பவே இல்லை: உதயநிதி ஸ்டாலின்நான் சொல்லியும் கூட தமன்னா நம்பவே இல்லை: உதயநிதி ஸ்டாலின்

    English summary
    Dhruv Vikram's Varmaa is renamed as Adhithya Varma and it will be directed by Girisayya.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X