Varmaa- என்னாது வர்மா கைவிடப்பட்டதா, சொல்லவே இல்லை: ஹீரோயின் அதிர்ச்சி
கொல்கத்தா: வர்மா படம் கைவிடப்பட்டது அதன் ஹீரோயினான மேகா சவுத்ரிக்கு தெரியாதாம்.
அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான வர்மா கைவிடப்பட்டுள்ளது. பாலா இயக்கிய இந்த படத்தில் த்ருவுக்கு ஜோடியாக புதுமுகம் மேகா சவுத்ரி நடித்திருந்தார். படம் முழுக்க எடுத்த பிறகு திருப்தியாக இல்லை என்று தெரிவித்துவிட்டது தயாரிப்பு நிறுவனம்.
இதையடுத்து த்ருவ் விக்ரமை வைத்து வேறு ஒரு இயக்குனர் வர்மாவை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேகா சவுத்ரி
வர்மா படம் கைவிடப்பட்ட தகவல் மேகா சவுத்ரிக்கு தெரியாதாம். நீங்கள் நடித்த வர்மா படம் கைவிடப்பட்டுள்ளது பற்றி என்னை நினைக்கிறீர்கள் என்று கேட்டவர்களிடம் என்னது படம் கைவிடப்பட்டதா என்று பாவம் போன்று கேட்டுள்ளார் மேகா.

ஹீரோ
மீண்டும் எடுக்கப்படும் வர்மா படத்தில் த்ருவ் விக்ரம் இருக்கிறார் என்று தான் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பாலா இல்லை என்பது தெரியும். ஆனால் ஹீரோயினும் மாற்றப்படுகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வேறு ஹீரோயின்
படம் கைவிடப்பட்டதை ஹீரோயினிடமே கூறவில்லை என்றால் புதிதாக எடுக்கப்படும் படத்தில் அவர் இருக்க மாட்டார் என்று பேச்சு கிளம்பியுள்ளது. பாவம் பல கனவுகளுடன் வந்த நடிகையின் நிலை இப்படி ஆகிவிட்டதே.

வேண்டாம்
அர்ஜுன் ரெட்டி படத்தை எல்லாம் ரீமேக் செய்யக் கூடாது. சில படங்களை ரீமேக் செய்யாமல் இருப்பது தான் நல்லது. த்ருவை வைத்து வேறு ஏதாவது படத்தை எடுக்கலாம் என்று நெட்டிசன்கள் ஐடியா கொடுத்துள்ளனர்.

வர்மா
பாலா ஒழுங்காக எடுக்காததால் வர்மா கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்த படத்தை பார்க்கும் ஆவல் அதிகரித்துள்ளது. பாலா இயக்கிய வர்மா படத்தை ரிலீஸ் செய்தால் அதில் அவர் அப்படி என்ன தான் தவறு செய்தார் என்பதை பார்க்க தியேட்டர்களுக்கு மக்கள் படையெடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications











