ஓடிடியில் பாலாவின் வர்மா.. வேலையை காட்டிய தமிழ்ராக்கர்ஸ்.. ட்விட்டரில் டிரெண்டாகும் #Varmaa!

By

சென்னை: பாலாவின் வர்மா படம் ஆன்லைனில் வெளியானதை அடுத்து ட்விட்டரில் #Varmaa என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், அர்ஜுன் ரெட்டி. 2017-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்திருந்தார்.

சந்தீப் வங்கா இயக்கி இருந்தார். ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடித்திருந்தார்.

ஷாகித் கபூர்

ஷாகித் கபூர்

ராகுல் ராமகிருஷ்ணா, ஜியா சர்மா, சஞ்சய் ஸ்வரூப் உள்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் இந்தியில் கபீர் சிங் என்ற பெயரில் ரீமேக் ஆனது. ஷாகித் கபூர் ஹீரோவாக நடித்திருந்தார். தமிழில், வர்மா என்ற பெயரில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது. இதை பாலா இயக்கினார்.

பர்ஸ்ட் காப்பி

பர்ஸ்ட் காப்பி

சேது படம் மூலம் தனக்குத் திருப்புமுனையை கொடுத்த பாலாவின் இயக்கத்தில் தன் மகன் துருவ் அறிமுகமாவதை விரும்பினார், விக்ரம். அதன்படி பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இந்த படத்தை பாலா இயக்கினார். படம் முடிந்தபின், தயாரிப்பு நிறுவனமான இ4 என்டர்டெயின் மென்ட்டுக்கும் பாலாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

ஆதித்யா வர்மா

ஆதித்யா வர்மா

இதையடுத்து அந்தப் படத்தை கைவிடுவதாக அறிவித்தனர். பின்னர் கிரிசாயா இயக்கத்தில் தெலுங்கு அர்ஜூன் ரெட்டியை அப்படியே, ஆதித்யா வர்மா என்ற பெயரில் உருவாக்கினர். விக்ரம் மகன் துருவ் ஹீரோ. கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

சிம்பிளி சவுத்

சிம்பிளி சவுத்

கொரோனா காலகட்டத்தில் பல படங்கள், ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை அதில் வெளியிட்டு வருகின்றனர். இதையடுத்து ஓரங்கட்டி வைக்கப்பட்ட பாலாவின் வர்மா படத்தையும் ஓடிடியில் வெளியிட்டுள்ளனர். இந்தப் படம் சிம்பிளி சவுத் என்ற ஓடிடி தளத்தில் இன்று (அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகி உள்ளது

தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ்

இந்தப் படத்தை இந்தியாவில் பார்க்க வாய்ப்பில்லை. வெளிநாட்டில் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க முடியும். இதற்கிடையே, வழக்கமாக அனைத்து படங்களையும் வெளியான அன்றே திருட்டுத்தனமாக ரிலீஸ் செய்யும் தமிழ் ராக்கர்ஸ் இதையும் ரிலீஸ் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வர்மா #Varmaa என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X