வர்மா நடிகை 'அப்படியா'ன்னு கேட்டபோது பயந்தது மாதிரியே நடந்துவிட்டது
சென்னை: மேகா சவுத்ரி அப்படியா என்று கேட்ட போதே இப்படித் தான் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான வர்மாவை த்ருவ் விக்ரம், மேகா சவுத்ரி உள்ளிட்டோரை வைத்து பாலா இயக்கினார். படம் திருப்தியாக வரவில்லை என்று கூறி வேறு ஒரு இயக்குநரை வைத்து முதலில் இருந்து எடுக்கிறார்கள்.
அர்ஜுன் ரெட்டி படத்தின் துணை இயக்குநர் கிரிசய்யா தான் வர்மா படத்தை இயக்கப் போகிறாராம்.

மேகா
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மேகா சவுத்ரிக்கு வர்மா தான் முதல் தமிழ் படம். அந்த படம் கைவிடப்பட்டதே அவருக்கு தெரியாதாம். விபரம் தெரிந்தவர்கள் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது அப்படியா என்று அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்பொழுதே அடுத்து என்ன நடக்கும் என்பது தெரிந்துவிட்டது.

வர்மா
வர்மா படத்தில் த்ருவ் விக்ரம் தான் ஹீரோ. ஆனால் இம்முறை ஹீரோயின் மேகா சவுத்ரி இல்லை. மாறாக பாலிவுட் நடிகை பனிடா சந்து நடிக்கிறார். படம் கைவிடப்பட்ட செய்தியை மேகாவுக்கு தெரிவிக்காதபோதே மீண்டும் எடுக்கப்படும் படத்தில் அவர் இருக்க மாட்டார் என்ற பேச்சு கிளம்பியது. தற்போது அது தான் நடந்துள்ளது.

ராசி
வர்மா படத்தில் மேகா சவுத்ரியை ஒப்பந்தம் செய்தபோதே அவர் த்ருவுக்கு அக்கா போன்று இருக்கிறார் என்ற விமர்சனம் எழுந்தது. ட்ரெய்லரை பார்த்தவர்களும் அவர் நடிப்பால் திருப்தி அடையவில்லை. இந்நிலையில் அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ராசி
முதல் படத்தில் இருந்து மேகா சவுத்ரி நீக்கப்பட்டுள்ளதால் அவர் ராசியில்லாத நடிகை என்ற பெயரை சுமக்க வேண்டி இருக்கும். அந்த ராசியில்லாத நடிகை என்ற இமேஜில் இருந்து அவர் வெளியே வந்துவிட்டால் வெற்றி தான்.


Click it and Unblock the Notifications











