பிகில் வர்ஷா போலாம்மா கர்ப்பம் - சமூக வலைதளங்களில் வைரலாகும் மீம்ஸ்

Recommended Video

Bigil Vs Kaithi Box Office : வெறித்தனம் ஓயவில்லை, நிரம்பி வழியும் கூட்டம்-வீடியோ

சென்னை: விஜய் நடித்து அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படத்தில் வர்ஷா போலம்மாவும் கால்பந்து வீராங்கனையாக நடித்துள்ளார். படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வர்ஷா போலம்மா. இப்படத்தில் தான் கர்ப்பமான விஷயத்தை நயன்தாரா விஜய்யிடம் சொன்னதை குறிப்பிட்டு வெளியான மீம்ஸை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் வர்ஷா. சோசியல் மீடியாவில் அது தற்போது வைரலாகி வருகிறது.

பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது. படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக பெண்களை இப்படம் மிகவும் கவர்ந்துள்ளது. படத்தை பார்த்த பெண்கள் படம் அனைத்து வித பெண்களையும் கவர்ந்ததாக கூறி இருந்தனர்.

Varsha Bollamma Memes goes viral on social networks

பிகில் திரைப்படம் பெண்களுக்கானது என்று படம் பார்த்த அனைவரும் கூறியுள்ளனர். படம் பார்க்காதவர்கள் கட்டாயம் பாருங்கள் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

பிகில் படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, ஜாக்கிஜெராஃப், டேனியல் பாலாஜி, இந்துஜா, கதிர், ஆனந்தராஜ், வர்சா போலம்மா, தீனா ஆகிய பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். ஒளிப்பதிவு மேற்பார்வையை ஜி.கே.விஷ்ணு செய்திருந்தார். படத்தொகுப்பு செய்திருப்பவர் ரூபன். பிகில் படத்தை 180 கோடியில் பிரம்மாண்டமாய் தயாரித்து இருந்தனர் ஏ.ஜி.எஸ் நிறுவனம்.

Varsha Bollamma Memes goes viral on social networks

தற்போது படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வர்ஷா போலம்மா காட்சியின் ஒரு மீம்ஸை டீவிட்டரில் பகிர்ந்துள்ளார் வர்ஷா போலம்மா. வர்ஷா போலம்மா தனது கால்பந்து கனவை விட்டுவிட்டு ஒரு குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருவார் அவரை மீட்டு மீண்டும் கால்பந்து அணியில் சேர்ப்பார் விஜய்.

ஆனால், அந்நேரத்தில் அவர் கர்ப்பமாகி விடுவார். இதனை சொல்ல வேண்டாம் என்று நயன்தாராவிடம் வர்ஷா போலம்மா முறையிட்டும் நயன்தாரா போய் விஜய்யிடம் கூறி விடுவார். இந்த காட்சியை நகைச்சுவையாக வடிவேலு நடித்த கிரி படக்காட்சியுடன் ஒப்பிட்டு ரசிகர் செய்த மீம்ஸை ஷேர் செய்து மகிழ்ச்சி அடைந்துள்ளார் வர்ஷா போலம்மா.

வர்ஷா போலம்மா போலவே, இப்படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்த அனைந்து பெண்களுமே படத்தில் நடிக்கும் போது எடுத்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிரந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X