2019 சூப்பரா போச்சு.. 2020 ஆண்டை வரவேற்கும் வர்ஷா போலம்மா

சென்னை : ட்விட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் வர்ஷா போலம்மா, 2019யை அமேசிங்காக மாற்றிய அனைவருக்கும் நன்றி 2020யை மனம் நிறைந்த அன்புடன் தொடங்குகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் வர்சாபோலம்மா. தற்போது புத்தாண்டை ஒட்டி கோயம்புத்தூரில் உள்ள ஜக்கி வாசுதேவின் ஆசிரமம் சென்று அங்குள்ள பிரமாண்ட சிவன் சிலை முன் புகைப்படம் எடுத்து அதனை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றி இருக்கிறார்

Varsha bollamma twitter

அதில் 2019யை அமேசிங்காக மாற்றிய அனைவருக்கும் நன்றி 2020யை மனம் நிறைந்த அன்புடன் தொடங்குகிறேன் என்று கூறியுள்ளார். 2019 உண்மையில் வர்சாவிற்கு சிறந்த ஆண்டு என்றே கூறலாம். இந்த வருடத்தில் இவர் நடித்த பிகில் படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது, இவரும் பிரபலமடைந்தார்.

2019ல் வர்சாவிற்கு தமிழில் பெட்டிகடை என்ற படமும் மலையாளத்தில் சூத்தரகாரன் என்ற படமும் வெளியானது, ஆனால் பிகில் படம் விஜயின் படம் என்பதால் இவரின் கதாபாத்திரம் வெகுவாக மக்களை சென்று அடைந்தது. இந்த படத்தில் அவருக்கு நல்ல பெயரும் கிடைத்தது. சிறிய கதாபாத்திரம் தான் என்றாலும் அந்த கதாபாத்திரம் அந்த கதைக்கு வலு சேர்ப்பது போல இருந்தது.

வர்சாபோலம்மா தமிழில் சதுரன் படம் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். அதன் பின் 2016ல் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த வெற்றிவேல் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின் இவன் யாரென்று தெரிகிறதா, யானும் தீயவன் ஆகிய படங்களில் நடித்தார் மேலும் மலையாளத்தில் கல்யாணம் மற்றும் மந்தரம் ஆகிய படங்களில் நடித்து இருந்தார்

Varsha bollamma twitter

எனினும் நல்ல கதாபாத்திரத்திற்காக காத்திருந்தார் வர்ஷா, அந்த சமயத்தில் அவர் செய்த பல டப்ஸ்மேஷ்கள் பிரபலமாகி பலரும் இவர் யாரென தேடினார்கள், அப்போது சிலர் இவர் பார்பதற்கு நடிகை நஸ்ரியா போல இருக்கிறார் என்றும் கூறினார்கள். அதன் மூலம் இவருக்கு 96 படத்தில் வாய்ப்பு கிடைத்தது .

96 படத்தில் ஒரு சிறிய அழகான கதாபாத்திரத்தில் நடித்து சென்றிருப்பார் வர்ஷா. தற்போது வர்ஷா போலம்மா தெலுங்கில் நாயகியாக நடித்து வருகிறார் . இவர் நடித்துள்ள சூசி சூந்தான்கேன என்ற படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X