வருண் அக்ஷராவுக்கு திருமணமா ?... இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களான வருண் மற்றும் அக்ஷராவும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில், வருண் மற்றும் அக்ஷரா கிட்டத்தட்ட80 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தார்.

நிகழ்ச்சி தொடங்கிய போதும் இருவரும் ஒன்றாகவே பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர். அதே போல டபிள் எவிக்ஷனில் இருவரும் சேர்ந்தே வெளியேறினர்.

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முன் எப்போதும் இல்லாத வகையில் பிரபலமே இல்லாதவர்கள் கலந்து கொண்டனர். இதில் தெறிந்த முகம் என்று பார்த்தால் அது ராஜூ,பிரியங்கா,வருண், இமான் அண்ணாச்சி மற்றும் பாவனி தான். மற்ற பிக் பாஸ் நிகழ்ச்சிகளைப் போலவே இந்த சீசனிலும் சுவாரசியத்திற்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது.

நல்ல நண்பர்கள்

நல்ல நண்பர்கள்

பாவனி, அபிநாய் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது பெரும் சர்ச்சையில் சிக்கினார் பாவனி. ஆனால், வருண் மற்றும் அக்ஷரா இருவரும் வீட்டிற்குள் நல்ல நண்பர்களாக இருந்தனர். இருவரின் நட்பு குறித்து கமல்ஹாசனும் பாராட்டினார். வீட்டில் இருக்கும்போதே நல்ல நண்பர்களாக இருந்த இருவரும், நிகழ்ச்சிக்குப் பிறகும் தங்களின் நட்பை தொடர்ந்து வருகின்றனர். பொது நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களில் ஜோடியாக நடிக்கின்றனர்.

வருண் அக்ஷராவுக்கு திருமணமா?

வருண் அக்ஷராவுக்கு திருமணமா?

அண்மையில் அவர்கள் இருவரும் இணைத்து ஒரு போட்டோஷூட் நடத்தினர். இந்த போட்டோஷூட் தான் தற்போது பேசுபொருளாகி உள்ளது. அதாவது அக்ஷரா மற்றும் வருண் இருவரும் மாப்பிள்ளை மற்றும் மணபெண் போல் உடையணிந்து அழகாக போஸ் கொடுத்துள்ளனர். இந்தப் புகைப்படம் இவர்களின் திருமணத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் போல் இருக்கிறது. இதனைப் பார்த்துதான் பலரும் அக்ஷரா மற்றும் வருண் திருமணம் என்ற வதந்தி வைரலானது. ஆனால், விளம்பர நிகழ்ச்சிகாக இருவரும் மாடல்களாக நடித்துள்ளனர்.

ஜோடி பொருத்தம் சூப்பர்

ஜோடி பொருத்தம் சூப்பர்

இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட்டை அக்ஷரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்துக்கு கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள், இருவரின் ஜோடி பொருத்தமும் சூப்பராக இருப்பதாக கூறியுள்ளனர். சிலர், அவர்கள் காதலிப்பதாலேயே இப்படியான போட்டோஷூட்களை எடுப்பதாகவும் கொளுத்தி போட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X