ஷோவே முடியல அதற்குள் அவசரம்.. எவிக்ட் ஆன சஞ்சீவை வரவேற்ற வருண் மற்றும் அக்ஷரா.. வெளியான பிக்ஸ்!
சென்னை: பிக் பாஸ் வீட்டுக்குள் எந்த நேரத்தில் எவனுக்கு குழி வெட்டலாம் என இஞ்சி தின்ன குரங்கு போல முகம் வைத்துக் கொண்டு சுற்றும் போட்டியாளர்கள் வெளியே வந்ததும் இயல்பாக செம ஹேப்பியாக சிரித்தபடி ரீயூனியன் நடத்தும் புகைப்படங்கள் ரசிகர்களை ரசிக்க வைத்து வருகின்றன.
பிக் பாஸ் வீட்டில் ரியாலிட்டியாக இருக்கிறார்களோ இல்லையோ? வெளியே வந்த பிறகு தான் உண்மையிலேயே போட்டியாளர்கள் ஹேப்பியாக உள்ளனர்.
இந்த வாரம் சஞ்சீவ் வெளியேறிய நிலையில், அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வருண் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

வெளியேறிய சஞ்சீவ்
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் சஞ்சீவ் வெங்கட் தான் வெளியேறி உள்ளார். சனிக்கிழமையான நேற்றே அதன் ஷூட்டிங் நடந்து முடிந்த நிலையில், சஞ்சீவின் எவிக்ஷனும் வழக்கம் போல முன்னதாகவே கசிந்து விட்டது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சஞ்சீவை வெளியே வரவேற்ற பிக் பாஸ் பிரபலங்கள் யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

வரவேற்ற வருண்
சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், வருண் அவரை வரவேற்றுள்ளார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் சஞ்சீவ் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்களையும் வருண் ஷேர் செய்துள்ளார்.

அக்ஷரா இல்லாமலா
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சஞ்சீவை வருண் வரவேற்ற நிலையில், அக்ஷராவும் இந்த சந்திப்பில் உடன் இருந்துள்ளார். மூவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகின்றன.

அதற்குள் அவசரம்
சஞ்சீவ் எவிக்டட் என கமல் கார்டை காட்டிய அடுத்த நொடியே நடிகர் வருண் மூவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் ஷேர் செய்து விட்டார். விளம்பரத்திற்கு பின்னர் தான் சஞ்சீவ் கமல் சாரையே சந்தித்து பேச ஆரம்பித்தார். அதற்குள் என்ன அவசரம் வருண் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

கதையின் நாயகனாக
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பல போட்டியாளர்களுக்கு சினிமாவில் சிறப்பான வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில், சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு செல்ல பல காலமாக முயற்சித்து வரும் சஞ்சீவ் கதையின் நாயகனாக நடிக்கப் போகும் படத்தின் பூஜையே ஜனவரி 15ம் தேதி நடைபெற உள்ள தகவலையும் அவர் வெளிப்படையாகவே கூறி விட்டு சென்றுள்ளார். அதே படத்தில் அக்ஷராவும் வருணும் இணைந்து நடிக்கப் போகிறார்களா? என்கிற கேள்வி தற்போது இந்த மூவரின் ரீயூனியனையும் பார்க்கும் போது எழுகிறது.


Click it and Unblock the Notifications











