அல்பத்தனமாக... அசிங்கமா விளையாடும் நிரூப்… ஆத்திரத்தில் கத்திய வருண்!
சென்னை : பிக் பாஸ் வீட்டின் 37வது நாளான இன்று லக்சரி பட்ஜெட் டாஸ்க் நடைபெறுகிறது.
இந்த டாஸ்கில் அக்ஷரா வெற்றிப்பெறக்கூடாது என்பதற்காக, நிரூப் மற்றும் வருண் அக்ஷரா இடையே சண்டை ஏற்பட்டது.
இவர்கள் இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக பிக் பாஸ் வீடே களேபரமானது.

லக்சரி பட்ஜெட் டாஸ்க்
இந்த வாரத்திற்கான லக்சரி பட்ஜெட் டாஸ்க் தொடங்கியது. இந்த டாஸ்கின் பெயர் "நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை" இந்த டாஸ் திற்காக கார்டன் ஏரியாவில் ஒரு சர்க்கஸ் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு பொம்மை கொடுக்கப்பட்டது.

வித்தியாசமான டாஸ்க்
போட்டியாளர்கள் தங்களின் பெயரில் உள்ள பொம்மையை எடுத்துக் கொண்டு ஓடக் கூடாது மற்றவரின் பெயர் இருக்கும் பொம்மையை எடுத்துக்கொண்டு ஓட வேண்டும். கூடாரத்தின் உள்ளே கடைசியாக ஓடி வரும் நபரின் கையில் இருக்கும் பொம்மையில் யாருடை பெயர் இருக்கிறதோ அந்த நபர் வெளியேற்றப்படுவார். இறுதிவரை யாருடை பொம்மை இருக்கிறதோ அவரே இந்த வார வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

பயங்கர சண்டை
இதையடுத்து பெல் அடித்து போது,அக்ஷரா வருணின் பொம்மையை எடுத்துக்கொடு ஓட முயன்றார். அப்போது நிரூப் அவரை ஓடவிடாமல் தடுத்து அவரை பிடித்துவைத்துக்கொள்கிறார். இதைப்பார்த்து கடுப்பான வருண், நிரூப்புடன் சண்டை போடுகிறார்.

அசிங்கமா இல்லையா
ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே சண்டை முற்றி வருண் கையில் வைத்திருக்கும் பொம்மையை பிடித்து இழுத்தார் நிரூப். இதனால், நிரூப்பின் பொம்மை தலை பாதி உடல் பாதியாக இரண்டாக பிஞ்சி விடுகிறது. இதனால் கருப்பான வருண், டேய் என்னடா கேம் விளையாடுரா... அல்பத்தனமா இருக்கு, இப்படி கேம் விளையாட அசிங்கமாக இல்லையா என கத்துகிறார் வருண். நிரூப்பும் பதிலுக்கு கத்த பிக் பாஸ் வீடே அலறுகிறது.


Click it and Unblock the Notifications











