உள்ள வந்தா பவரடி.. அண்ணன் யாரு தளபதி.. உற்சாகத்தில் வருண் சக்கரவர்த்தி.. தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி தளபதி விஜய்யை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மேஜிக் ஸ்பின்னராக இந்த ஆண்டு கலக்கோ கலக்குன்னு கலக்கியவர் வருண் சக்கரவர்த்தி.
வருண் ஒரு தீவிர விஜய் ரசிகர் என்பதை அறிந்து கொண்ட ரசிகர்கள், ஐபிஎல் போட்டியின் போதே வருண் சக்கரவர்த்தியை வேற லெவலில் டிரெண்ட் செய்தனர்.

வருண் சக்கரவர்த்தி
நடிகர் ஷாருக்கானின் கொல்கத்தா அணியில் இடம்பெற்ற தமிழக கிரிக்கெட் வீரரான வருண் சக்கரவர்த்தி, தனது மாய சுழலில் டெல்லி அணி வீரர்களை புரட்டி எடுத்த போட்டியை ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் வருண் என்பதை அறிந்து கொண்ட விஜய் ரசிகர்கள் வருணை கொண்டாட ஆரம்பித்தனர்.

விஜய் டாட்டூ
வருண் சக்கரவர்த்தியின் இடது கை தோள்பட்டையில் தளபதி விஜய் டாட்டூ இருப்பதை பார்த்த ரசிகர்கள், இவர் நம்மை விட தீவிர விஜய் வெறியனா இருப்பார் போல என வருண் சக்கரவர்த்திக்கு தனியாக ஒரு ரசிக ஆர்மியையை ஐபிஎல் போட்டியின் போது ஆரம்பித்தனர். வருண் சக்கரவர்த்தியின் டாட்டூவை பார்த்த பிறகு ஏகப்பட்ட விஜய் ரசிகர்கள் அதே போன்ற டாட்டூக்களை குத்தி வருகின்றனர்.

ஜீவா படத்தில்
சமீப காலமாக ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான் உள்ளிட்டோர் கிரிக்கெட்டில் இருந்து சினிமாவுக்கு அடியெடுத்து வைத்துள்ளனர். ஆனால், சினிமாவில் இருந்து கிரிக்கெட்டுக்கு அடியெடுத்து வைத்தவர் தான் வருண் சக்கரவர்த்தி. நடிகர் விஷ்ணு விஷாலின் ஜீவா படத்தில் வருண் சக்கரவர்த்தி கிரிக்கெட் வீரராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தளபதி தரிசனம்
தளபதி விஜய்யை சந்திக்க வேண்டும் என்கிற வருண் சக்கரவர்த்தியின் கனவு தற்போது நிறைவேறி உள்ளது. நடிகர் விஜய்யை சந்தித்த வருண் சக்கரவர்த்தி அவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோவை ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார். #VarunChakravarthy என்ற ஹாஷ்டேக்கையும் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அண்ணன் யாரு தளபதி
மேலும், அந்த போட்டோவுக்கு கூடவே கேப்ஷனாக, மாஸ்டர் படத்தின் பாடல் வரிகளை வருண் சக்கரவர்த்தி பதிவிட்டுள்ளார். "உள்ள வந்த பவரடி.. அண்ணன் யாரு தளபதி" என போட்டு விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்று விட்டார். தளபதி ரசிகர்கள் ட்விட்டரில் தங்களது ராஜாங்கத்தை மீண்டும் உருவாக்க இன்னொரு வாய்ப்பாக இது அமைந்துள்ளது.

மாஸ்டர் பஞ்ச்
சும்மா தளபதி விஜய்யுடன் நின்றபடி போட்டோ எடுக்காமல், சமீபத்தில் வெளியான மாஸ்டர் டீசரின் இறுதியில் இடம்பெற்ற காட்சியை போல, போஸ் கொடுத்து போட்டோ போட்டுள்ளார் வருண். விஜய்சேதுபதியும், விஜய்யும் கைகைளை மடக்கி முட்டிக் கொள்வது போல, வருணும், விஜய்யும் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











