Baby John Box Office Prediction: இந்தியில் வெற்றி கொடி நாட்டிய தெறி ரீமேக் .. முதல் நாள் வசூல் இதுவா?
மும்பை: அட்லீ இயக்கத்தில் வெளியாகி செம ஹிட் அடித்த படம் தெறி. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் படம்தான் பேபி ஜான். இந்தப் படத்தினை அட்லீயே தயாரித்திருந்தாலும், படத்தில் சில காட்சிகள் இந்திய ஆடியன்ஸ்க்காக மாற்றப்பட்டுள்ளது. படத்தினை காலீஸ் இயக்கியுள்ளார். வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வமிகா கபி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடிப்பில் படம் வெளியாகியுள்ளது. படத்தில் சல்மான் கான் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு இருக்கும் என்ற வசூல் கணிப்பு விவரம் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே குறிப்பிட்டத்தைப்போல் இந்தப் படம் அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக். தெறி படம், அட்லீயின் திரைவாழ்வில் அவரது இரண்டாவது படம் ஆகும். மேலும், விஜய்யுடன் முதல் படம் இதுதான். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா அட்டகாசமான நடிப்பினை வெளிப்படுத்தினார். மேலும், விஜய் - சமந்தா தம்பதியரின் மகளாக நடிகை மீனாவின் மகள் நடித்திருந்தார்.

தற்போது அட்லீ பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்திக்கொண்டு இருக்கின்றார். ஏற்கனவே, ஷாரூக்கானை வைத்து ஜவான் என்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் படம் கொடுத்தார். அதன் பின்னர் இந்தி திரையுலகில் தனது தெறி படத்தை ரீமேக் செய்து, அதனை தானே தயாரித்து வெளியிடவும் செய்துள்ளார் அட்லீ. இவரது இயக்கத்தில் அடுத்ததாக, நடிகர் சல்மான் கான் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இவர்கள் இருவரையும் வைத்து, பான் இந்தியா படம் எடுக்க அட்லீ திட்டமிட்டு வருவதாக கூறப்படுகின்றது.

சல்மான் கான்: இப்படியான நிலையில்தான், பேபி ஜான் படத்தில் சல்மான் கான் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க சல்மான் கான் சம்பளமே வாங்கவில்லை என கூறப்படுகின்றது. பேபி ஜான் படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார் அட்லீ. இதுமட்டும் இல்லாமல், இந்தப் படத்தின் மூலம் இந்தி திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

சர்ப்ரைஸ்: படத்தைப் பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக சல்மான் கான் வரும் காட்சி ரசிகர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காத காட்சிகள் என்பதால், தியேட்டரே அதிர்ந்துள்ளது. இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட சல்மான் கானின் தீவிரமான ரசிகர்கள், திரையரங்கை நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால் படத்தின் புக்கிங் வீக் எண்ட் முடியும் வரை பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ் புல் ஆகியுள்ளது.

வசூல் கணிப்பு: இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு குறித்து இணையத்தில் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றது. படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூபாய் 16 கோடிகள் வசூல் செய்யும் எனக் கூறப்படுகின்றது. இது வருண் தவானுக்கு கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பின்னர் கிடைத்துள்ள மிகப்பெரிய ஓபனிங் என கூறப்படுகின்றது. இந்தத் தகவலைத் தெரிந்து கொண்ட விஜய் ரசிகர்கள் பேபி ஜான் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











