மிரட்டும் கொரோனா.. திருமணத்தை தள்ளி வைத்த ஹீரோ, ஹீரோயின்.. தாய்லாந்து ரிசார்ட் நிகழ்ச்சி கேன்சல்!

By

மும்பை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தங்களது திருமணத்தைத் தள்ளி வைத்திருக்கிறார்கள் நடிகர்கள்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த வைரஸ்.

இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தியேட்டர்கள்

தியேட்டர்கள்

அதன் ஒரு கட்டமாக மக்கள் அதிகமாகக் கூடும் மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றை வரும் 31 ஆம் தேதி மூட உத்தரவிடப்பட்டுள்ளன. இதையடுத்து தியேட்டர்கள் மூடப்பட்டன. சினிமா படப்பிடிப்புகள் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. டிவி சிரீயல்களின் ஷூட்டிங்கும் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்த சினிமா நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வருண் தாவன்

வருண் தாவன்

இந்நிலையில் தங்களது பிரமாண்ட திருமண ஏற்பாடுகளையும் நடிகர், நடிகைகள் தள்ளி வைத்துள்ளனர். பிரபல இந்தி நடிகர் வருண் தாவன். பிரபல இயக்குனர் டேவிட் தாவனின் மகனான இவர், ஸ்டூடன்ட் ஆப் த இயர், பட்லாபூர், ஏபிசிடி 2, தில்வாலே, கிளாங்க் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடாஷா என்பவரை கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகிறார்.

தாய்லாந்து ரிசார்ட்

தாய்லாந்து ரிசார்ட்

இவர்கள் திருமணம் இந்த வருட கோடையில் நடப்பதாக இருந்தது. இதற்காக தாய்லாந்தில் பிரமாண்ட ரிசார்ட் ஒன்றை புக் செய்திருந்தனர். திருமணத்தை அங்கே முடித்துவிட்டு மும்பையில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்திருந்தனர். ஆனால், கொரோனா அச்சுறுத்தலால், அந்த திட்டம் கைவிடப்பட்டது. அவர்கள் தங்கள் திருமணத்தை ஜோத்பூரில் நவம்பரில் நடத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகை ரிச்சா சத்தா

நடிகை ரிச்சா சத்தா

இதே போல நடிகர் அலி பஸலும் நடிகை ரிச்சா சத்தாவும் தங்கள் திருமணத்தைத் தள்ளி வைத்துள்ளனர். ரிச்சா, நடிகை ஷகிலாவின் வாழ்க்கைக் கதையில் நடித்து வருகிறார். அலி பஸலும் நடிகை ரிச்சாவும் கோடையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். கொரோனா காரணமாக இவர்களும் தங்கள் திருமணத்தை தள்ளி வைத்துள்ளதாக பாலிவுட் கூறுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X